ஜின்களின் உணவு
மனிதர்கள் உண்டுவிட்டு எரியும் எலும்புகளும் கால்நடைகளின் சாணங்களும் கரிக்கட்டைகளும் ஜின்களின் உணவாகும். சாப்பிடுவதற்கு இவற்றில் ஒன்றுமில்லையே என்று நமக்குத் தோன்றினாலும் ஜின்களுக்கு அதில் அல்லாஹ் நிறைவான உணவை வைத்துள்ளான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3860)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பெயர் சொல்லிலி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்'' என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் (767)
ஜின்கள் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே எழும்பு கெட்டிச் சாணம் கறிக்கட்டை ஆகியவற்றால் துப்புரவு செய்வதை விட்டும் உங்கள் சமுதாயத்தினரை தடுங்கள். ஏனென்றால் இவற்றில் தான் அல்லாஹ் எங்களுக்கு உணவை ஏற்படுத்தியிருக்கிறான் என்று கூறின. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதனை தடுத்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூதாவுத் (35)
ஜின்களின் இருப்பிடம்
மனிதர்களைப் போலவே ஜின்களும் பூமியில் ஆங்காங்கே வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக்கணவாய்களில் தங்கி இருக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3860)
அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : வயோதிகராக இருந்த அப்துர் ரஹ்மான் பின் கம்பஷ் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தை அடைந்தவரா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள். ஷைத்தான்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தாக்குவதற்காக) நெருங்கிய போது நபியவர்கள் என்ன செய்தார்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர் அந்த இரவில் ஷைத்தான்கள் ஓடைகளிலிருந்தும் மலைக் கணவாய்களிலிருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி (தாக்குவதற்காக) விரைந்தன. அவர்களில் ஒரு ஷைத்தானுடைய கையில் தீப்பந்தம் இருந்தது. அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தை கரிப்பதற்கு அந்த ஷைத்தான் நினைத்தது. அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானிலிருந்து இறங்கி வந்து முஹம்மதே நான் கூறுவதை நீங்களும் கூறிக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் முழுமையான (குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும் வானிலிருந்து இறங்குபவற்றின் தீங்கிலிருந்தும் வானில் ஏறுபவற்றின் தீங்கிலிருந்தும் இரவு பகலில் ஏற்படும் குழப்பதின் தீங்கிலிருந்தும் நன்மையை விளைவிக்கும் நட்சத்திரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து தாரகைகளின் தீங்கிலிருந்தும் அளவற்ற அருளாளனே (உன்னிடம்) பாதுகாப்புத் தேடுகிறேன் என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். உடனே ஷைத்தான்களின் நெருப்பு அனைக்கப்பட்டு பாக்கியமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவர்களை தோல்வியுறச் செய்தான். நூல் : அஹ்மத் (14914)
ஜின்களுக்கு மரணம் உண்டு
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் மரணம் உண்டு. மனிதர்களிலும் ஜின்களிலும் பலர் சென்றுவிட்டதாக அல்லாஹ் கூறுவதிலிருந்து இதை அறியலாம்.
அவர்களுக்கு முன் சென்ற ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் சேர்த்து இவர்களுக்கு எதிராகவும் இறைவனின் கட்டளை உறுதியாகி விட்டது. இவர்கள் நஷ்டமடைந்தனர். அல்குர்ஆன் (46 : 18)
நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தனை செய்துவந்தார்கள்: (இறைவா!) உன் கண்ணியத்தின் பெயரால் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; (ஆனால்,) நீ இறக்கமாட்டாய். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (7383)
ஜின்களை காண முடியாது
இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். கண்களுக்குத் தென்பட மாட்டார்கள் என்ற விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம்.
ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானும் அவனது கூட்டத்தாரும் மனிதர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் இவர்களை பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பி விட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். அல்குர்ஆன் (7 : 27)
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியபோது குர்ஆனை கேட்பதற்காக அவர்களை சுற்றி ஜின்கள் அமர்ந்திருந்தனர். இதை நபி (ஸல்) அவர்களால் சுயமாக அறிந்துகொள்ளமுடியவில்லை. அல்லாஹ் அவர்களுக்கு வஹியின் மூலம் இதை அறிவித்துக்கொடுத்த பின்பே இதை நபியவர்கள் அறிந்துகொண்டார்கள்.
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்குர்ஆன் (72 : 1)
இறைவனுடைய உதவியின்றி சுயமாக நபி (ஸல்) அவர்களாலேயே அறிந்துகொள்ள முடியாது என்றால் வேறு எவராலும் நிச்சயமாக ஜின்களை பார்க்கவே முடியாது. இதை நாம் விளங்கிக்கொண்டால் ஜின்களின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களில் நாம் விழுந்து விட மாட்டோம்.
விலங்குகளால் பார்க்க முடியும்
ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானை பார்க்கும் ஆற்றலை அல்லாஹ் விலங்குகளுக்கு வழங்கியுள்ளான். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.) அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3303)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் இரவில் நாய் உளையிடுவதையும் கழுதை கத்துவதையும் செவியுற்றால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்தேடுங்கள். ஏனென்றால் அவைகள் உங்களால் பார்க்க முடியாத (தீய)வற்றை பார்க்கின்றன. அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : அபூதாவுத் (4439)
மேற்கண்ட செய்தி ஜின்களை மனிதர்களால் பார்க்க முடியாது என்று கூறுவதுடன் விலங்குளால் பார்க்க் முடியும் என்ற கருத்தையும் தருகிறது.
நபியவர்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
ஜின்களை சாதாரண மனிதர்களால் பார்க்க முடியாவிட்டாலும் சில சந்தர்பங்களில் ஜின்களை காணுகின்ற வாய்ப்பை அல்லாஹ் நபிமார்களுக்கு பிரத்யேகமாக ஏற்படுத்தி இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் கூட ஒரு சமயத்தில் ஜின்னை பார்த்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) தொழும்போது "நான் உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்றும், "அல்லாஹ்வின் சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்''என்றும் மூன்று முறை கூறியதை நாங்கள் செவியுற்றோம். மேலும், அவர்கள் தமது கரத்தை விரித்து எதையோ பிடிப்பதைப் போன்று சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தொழும்போது ஒன்றைக் கூறினீர்கள். இதற்கு முன் தாங்கள் அவ்வாறு கூறியதை நாங்கள் கேட்டதில்லையே? மேலும், நீங்கள் உங்கள் கரத்தை விரித்ததையும் நாங்கள் கண்டோமே (ஏன்)?'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் எதிரி இப்லீஸ் ஒரு தீப்பந்தத்தை ஏந்திக்கொண்டு அதை என் முகத்தில் வைக்க (என்னிடம்) வந்தான். உடனே நான் "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று மூன்று முறையும் "அல்லாஹ்வின் முழு சாபத்தால் உன்னை நான் சபிக்கிறேன்' என மூன்று முறையும் கூறினேன். ஆனால், அவன் பின்வாங்கிச் செல்லவில்லை. பிறகு நான் அவனைப் பிடிக்க விரும்பினேன். அல்லாஹ் வின் மீதாணையாக! எம் சகோதரர் சுலைமான் (அலை) அவர்களின் வேண்டுதல் மட்டும் இல்லையாயின், காலையில் மதீனா நகரச் சிறுவர்கள் அவனுடன் விளையாடும் வகையில் (இந்தப் பள்ளிவாசலில்) அவன் கட்டிவைக்கப்பட்டிருப்பான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : முஸ்லிம் (942)
நபி (ஸல்) அவர்கள் ஜின்னை பிடித்த போது நபியவர்கள் மட்டும் தான் நபித்தோழர்களின் கண்களுக்கு தென்பட்டார்கள். ஜின்னை நபித்தோழர்களால் பார்க்க முடியவில்லை. நான் ஜின்னைத் தான் பிடித்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகே நபித்தோழர்களுக்கு விஷயம் தெரிந்தது. நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்த நபித்தோழர்களுக்கே ஜின்னை பார்க்க முடியவில்லை. ஜின் செய்யும் சேட்டையை உணர முடியவில்லை என்றால் மற்றவர்களால் ஜின்களை பார்க்கவே முடியாது என்பது மிகத் தெளிவாகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் ஜின்களை பார்த்தும் ஜின்களோடு பேசியும் இருக்கிறார்கள் என்பது தான் சரியான கருத்தாகும். இதற்கு மேலுள்ள செய்தியும் பின்வரும் ஹதீஸ்களும் ஆதாரமாக உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலüத்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3860)
ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்'' என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் (767)
மேலுள்ள செய்திகளுக்கு மாற்றமாக நபியவர்கள் ஜின்களை பார்க்கவுமில்லை. ஜின்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டவுமில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. நூல் : முஸ்லிம் (766)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இக்கூற்று அபுத்தர்தா (ரலி) அபூஹுரைரா (ரலி) இப்னு மஸ்ஊத் (ரலி) ஆகிய மூவரும் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக உள்ளது. இம்மூவரும் நடந்து முடிந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஜின்களை கண்டு அவர்களுடன் பேசிய தகவல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு சென்றடையாமல் இருந்திருக்கலாம். எனவே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் இக்கூற்று தவறானதாகும்.
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...