உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்
சில ஜின்கள் பாம்புகளாக உருமாற்றம் செய்யப்பட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அஹ்மத் (3085) தப்பரானீ (4364)
உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததிகளை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இந்த வகை உயிரினங்களுக்கு வழிதோன்றல்கள் இல்லாததால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அழிந்து போயிருக்கும். எனவே தற்காலத்தில் பாம்பு வடிவில் உருமாற்றப்பட்ட ஜின்கள் இருப்பதற்கு சாத்தியமில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் (5176)
பாம்புகளை கொல்ல வேண்டும்
பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, "பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ("துத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான- அல்லது- சிதைந்த வால் கொண்ட ("அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று சொல்ல நான் கேட்டேன். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (3297)
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, "வல் முர்சலாத்தி'' (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ü வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம்.

அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (4934)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை பாம்பு காகம், பருந்து, எலிலி, வெறிநாய் ஆகியனவாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : நஸயீ (2780)
பாம்புகள் பலிவாங்குமா?
பாம்புகளை கொன்றால் அவை இறந்த பிறகு மீண்டும் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை பலிவாங்கும் என்ற தவறான நம்பிக்கை சில மக்களிடம் உள்ளது. அடிபட்ட பாம்பு தப்பிவிட்டால் அடித்தவரை அது பாலிவாங்காமல் விடாது என்று கருதி பாம்பைக் கண்டால் பயந்து நடுங்குபவர்களும் உண்டு.
இது போன்ற தவறான நம்பிக்கையின் காரணமாக பாம்புகளை கொல்லாமல் விடுவது பாவம் என்கின்ற அளவிற்கு நபி (ஸல்) கண்டித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பாம்புகள் பலிவாங்கிவிடும் என்று பயந்து யார் அவைகளை கொல்லாமல் விட்டுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. பாம்புகளுடன் நாம் சண்டையிடத்தொடங்கியது முதல் என்றுமே அவைகளுடன் நாம் இணக்கமானதில்லை. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அபூதாவுத் (4570)
ஜின்களில் ஆண்களும் பெண்களும் உண்டு
ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண் பெண் என்ற இரு இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் பெண் இனங்கள் உண்டு. மனிதர்களில் ஆண் இனம் இருப்பது போல் ஜின்களிலும் ஆண் இனம் உள்ளது என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது.
மனிதர்களில் உள்ள ஆண்களில் சிலர் ஜின்களில் உள்ள சில ஆண்களைக் கொண்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தனர். எனவே இவர்களுக்கு கர்வத்தை அவர்கள் அதிகமாக்கி விட்டனர். அல்குர்ஆன் (72 : 6)
ஷைத்தான்கள் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களாவர். ஷைத்தான்களில் ஆண் பெண் இனம் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஜின்களில் இவ்விரு இனம் இருப்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைய முற்படும்போது, "இறைவா! (அருவருக்கத்தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியற்றைத் தூண்டும்) ஆண் பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று கூறுவார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (142)
ஜின்களின் இனப்பெருக்கம்
ஜின்களில் ஆண் பெண் ஜோடிகள் இருப்பதால் அவர்களுக்கிடையே இணைபெருக்கம் நடைபெறும் என்பதை அறியலாம். ஜின் இனத்தைச் சார்ந்த ஷைத்தானிற்கு வழிதோன்றல்கள் இருப்பதாக அல்லாஹ் கூறுவதிலிருந்தும் இதை அறியாம்.
என்னையன்றி ஷைத்தானையும், அவனது சந்ததிகளையும் பொறுப்பாளர்களாக்கிக் கொள்கிறீர்களா? அவர்கள் உங்களுக்கு எதிரிகள். அநீதி இழைத்தோர் பகரமாக்கியது மிகவும் கெட்டது. அல்குர்ஆன் (18 : 50)
இணைப்பெருக்கத்திற்குத் தேவையான காம உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்தி இருப்பது போல் ஜின்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.
அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. அல்குர்ஆன் (55 : 56)
தனது துணையை தீண்டும் பண்பு மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் உண்டு என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் உள்ளடங்கியுள்ளது.
மனிதன் விரும்புகின்ற விஷயங்களில் இல்லற இன்பம் முக்கியமானது. இதை மனிதன் மட்டுமல்லாமல் ஜின்களும் பெரும் பாக்கியமாக நினைக்கிறார்கள் என்பதால் மனித ஜின் கூட்டத்தினரை அழைத்து இந்த பாக்கியம் சொர்க்கத்திலும் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள். உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும் ஜின்னும் தீண்டியதில்லை. உங்கள் இறைவனின் அருட் கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள். அல்குர்ஆன் (55 : 70)
ஜின்களுக்கிடையே அன்பு
நேசிப்பது இரக்கப்படுவது போன்ற குணங்கள் ஜின்களுக்கும் உண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகிய வற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (5312)
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...