Saturday, February 28, 2015

ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 18

9. சுலைமான் நபிக்கு மறைவான ஞானம் உள்ளதா?


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள் இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள். அதற்கு அவருடைய தோழர் ஒருவர் அல்லாஹ் நாடினால் என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயோரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை. இன்ஷா அல்லாஹ் என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபதுபேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (3424)


சுலைமான் நபிக்கு 100 மனைவிகளோ 100 அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக்கொண்டாலும் மனித ஆற்றலையும் நேரத்தையும் கவனிக்கும் போது ஒரு இரவில் அனைவருடன் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சயைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.

1. இறைத்தூதாராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்துகொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக்கருவறையில் எத்தனைக் குழந்தைகள் உண்டாகும்? கருவறையில் குழந்தை உண்டாகுமா? ஆகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் (34 : 31)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (4697)


இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூறியிருக்கமாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபி (ஸல்) அவர்களும் கூறியிருக்கமாட்டார்கள்.

மேலும் இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு வானவர் சுட்டிக்காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் சொல்ல மறந்துவிட்டால் யாராவது நினைவுபடுத்தினால் உடனே திருத்திக்கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டியப் பின்னரும் சுலைமான் நபி செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.

எனவே இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கைய தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தபோதும் இதை நாம் புறக்கணிக்க வேண்டும். இச்சம்பவம் உண்மை என்று நம்பினால் குர்ஆனுடைய பலவசனங்களை மறுத்தவர்களாகிவிடுவோம்.

முரண்பாடுகள்


இது போக இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிபடுத்துகிறது.

நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி (5242)

எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி (3424)

அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக புகாரி (7469) ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.


இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. 60 70 90 100 என்று முரண்பட்ட எண்ணிக்கையில் இந்த செய்தி வருவதால் இது உள்ளதுபடி நமக்கு வரவில்லை. பலவிதமான மாற்றங்களுக்கு இந்த செய்தி உட்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுமாறு மலக்கு கூறியதாக ஒரு செய்தி கூறுகிறது. புகாரி (5242)

சுலைமான் நபியின் தோழர் கூறியதாக இன்னோரு செய்தி கூறுகிறது. புகாரி (3424)

சுலைமான் நபியின் தோழர் அல்லது வானவர் இவர்களில் யாரோ கூறியதாக சந்தேகத்துடன் இன்னொரு செய்தியில் இடும்பெற்றுள்ளது. முஸ்லிம் (3402)

மனைவியிடத்தில் உடலுறவு கொள்வதை நாகரீகம் உள்ள எவரும் வெளியில் சொல்லமாட்டார்கள். இறைத்தூதராக விளங்கும் சுலைமான் நபி இந்த விசயத்தை எப்படி வெளியில் சொல்லியிருப்பார்கள் என்று சிந்தித்தால் இது தவறான ஹதீஸ் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

அவர்களின் விளக்கம்


சுலைமான் நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்துக்கொடுத்ததன் அடிப்படையில் இதை அவர்கள் கூறியிருக்கலாம் என்று விளக்கம் கொடுத்தால் குர்ஆனுடன் இச்செய்தி முரண்படாது என்று இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் கூறுகிறார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸிற்கு எந்த வகையிலும் பொருந்தவில்லை.

Sunday, February 15, 2015

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா?


கேள்வி -  நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? - ஹாஜா ஹமீது, நாகை

பதில் பி.ஜே - நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும் இணைத்தே முடிவுக்கு வர வேண்டும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4115

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?'' என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது'' என்று கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.

நூல் முஸ்லிம் 4116

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4117

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4118


அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா,

நூல் : புகாரி 5615, 5616

முதலாவது ஹதீஸ் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதைத் தடை செய்கின்றது. இரண்டாவது ஹதீஸ் நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள் என்று தெரிவிக்கின்றது.

ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு அதை நபிகள் நாயக்ம்  (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஹதீஸ்கள் காணப்பட்டால் தடையையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த அடிப்படையில் நின்று கொண்டு அருந்துவது கூடாது.

எனினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு நீர் அருந்தினார்கள் என்று பல ஹதீஸ்கள் இருப்பதால், தவிர்க்க முடியாத சமயத்தில் நின்று கொண்டு அருந்தினால் தவறில்லை என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில் (5617) இடம் பெற்றுள்ளது.

இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.

உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 4119


இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் நூலில் மிகப் பெரும் அளவுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே இடம்பெற்றிருந்தாலும் மிகக் குறைந்த அளவு பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றில் இந்த ஹதீசும் ஒன்றாகும்.

(குறிப்பு: 2003 ஏப்ரல் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கேள்வி)

Saturday, February 7, 2015

பிரச்சனைக்குரிய விஷயங்கள் தேவைதானா?

கேள்வி - இறைவனுக்கு உருவம் உண்டு, சொர்க்கம் பூமியில் தான் படைக்கப்படும் என்பன போன்ற ஆய்வுகள் தற்போது தேவையா? நாம் செல்ல வேண்டிய பயணம் இன்னும் இருக்கும் போது இது போன்ற விஷயங்கள் இன்றைய காலத்தில் அவசியமா? - மைதீன்

பதில் பி.ஜே - இறைவனுக்கு உருவம் உண்டு மற்றும் சொர்க்கம் பூமியில் தான் அமைக்கப்படும் என்று நாம் சொன்னதை தற்போது இது தேவையா என்று கேள்வி எழுப்பி இவைகள் தேவையற்ற விஷயங்கள் என்று சொல்கிறீா்கள்.

அப்படி எனில் தேவையற்ற, மக்களுக்குப் பயனில்லாத விஷயங்களை இறைவனும் இறைத்தூதரும் சொல்லியிருக்கிறார்கள் என்ற பாரதூரமான கருத்தை விதைக்கிறீா்கள். உண்மையில் இது தான் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிந்தனையாகும்.

இந்தக் கருத்தை இப்போது சொன்னால் இவரைப் பாதிக்கும் இது அவரைப் பாதிக்கும் என்று பிறருடைய முகதாட்சினை பார்த்தால் மார்க்கத்தில் உள்ள எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது போகும்.

உமக்குக் கட்டளையிடப்பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! கேலி செய்வோரை விட்டும் நாமே உம்மைக் காப்போம்.

அல்குா்ஆன் 15 94  95


நாம் கூறிய இந்தக் கருத்துக்கள் நம்முடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. திருக்குா்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் தான் எடுத்துக் கூறியிருக்கிறோம். இதற்கான ஆதாரங்களையும் அதில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

இந்தக் கருத்துக்கள் மக்களுக்கு சொல்லப்பட வேண்டாதவை எனில் இறைவன் ஏன் இதை குா்ஆனில் கூற வேண்டும்? நபிகளார் இதை நபித்தோழா்களுக்கு ஏன் சொல்ல வேண்டும். இந்தக் காலத்திலேயே இந்தக் கருத்துகள் தேவையற்றவை எனில் நபித்தோழா்கள் காலத்தில் இதை நபிகளார் ஏன் சொன்னார்கள்? எனவே இந்தக் கருத்துக்களை தேவையா என்று விமா்சிப்பது குா்ஆனையும் நபிமொழியையும் இறைவனையும் இறைத்தூதரையும் விமா்சிப்பதாக ஆகும்.

நன்மையான காரியங்களில் எதையும் அற்பமானதாகக் கருதாதீா்கள் என்பது நபிமொழி முஸ்லிம் 6857

குா்ஆனும் நபிமொழிகளும் மக்களுக்குச் சொல்வதற்காகத் தான் என்ற அடிப்படைக்கு மாற்றமாகவும் இந்த நபிமொழிகளுக்கு மாற்றமாகவும் உங்கள் கேள்வி அமைந்துள்ளது

உங்களைப் போல் சிலர் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படித் தான் சொன்னார்கள். தர்காவை எதிர்த்த போது இப்போது இது தேவையா என்று கேட்டார்கள். இதனால் சமுதாயத்தில் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றார்கள்.

பின்னர் மத்ஹபுகளில் நாம் கை வைத்த போது தர்காவைப் பற்றி சொன்னீர்கள். அது சரிதான். ஆனால் மத்ஹப் பற்றி இப்போது பேசுவது தேவையா? இதனால் தர்காவைப் பற்றி நாம் பேசுவதும் எடுபடாமல் போய் விடுமே என்றார்கள்.

பின்னர் தராவீஹ் தொழுகை பற்றி பேசிய போது இது போன்ற பிரச்சனைகளால் மக்களின் கோபம் உங்கள் மீது திரும்பும். இதனால் எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொல்ல முடியாமல் போகுமே என்றார்கள்.

விரல்சைத்தல் தாமதமின்றி நோன்பு துறத்தல், ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்பன போன்ற விஷயங்களைச் சொன்ன போதும் நீங்கள் சொன்ன இதே கோரிக்கைகள் வந்தன.


ஆனால் இந்த சகோதரர்கள் பயந்தது போல் ஒன்றும் ஆகவில்லை. எல்லா உண்மைகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத்தான் செய்தனர். உறுதியான அஸ்திவாரத்தின் மீது அதாவது குர்ஆன் ஹதீஸ் மீது நமது கொள்ளை கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதை மக்கள் மத்த்யில் நாம் கொண்டு சென்று விட்ட்தால் குர் ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் நாம் சொல்லும் அனைத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

உங்களைப் போன்றவர்கள் இப்படி நினைப்பதற்குக் காரணம் இதனால் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும். நிறைய எதிர்ப்புகளால் நம்முடைய பணிகள் பாதிக்கும் என்ற மனநிலை தான். இந்த மனநிலை மாறினால் எல்லாம் சரியாகி விடும்.

Tuesday, February 3, 2015

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 17 - பி.ஜே

சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தை நாம் சொல்லும் போது சூனியத்தால் எதுவும் செய்ய முடியும் என்ற கருத்தில் உள்ளவர்கள் பல எதிர்வாதங்களை வைக்கிறார்கள்.

முஃதஸிலா என்ற ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள். நபிமார்களின் அற்புதங்களையும் மறுப்பவர்கள். இவர்கள் வழிகெட்ட கூட்டம் என்று வரலாறுகளில் முன்பே புறக்கணிக்கப்பட்டவர்கள்.

இந்தக் கூட்டம் ஒரு காலத்தில் இருந்தது. இப்போது கிடையாது. இந்தக் கூட்டத்தைத் தான் வழிகெட்டவர்களுக்கு உதாரணமாக அனைத்து நல்லறிஞர்களும் குறிப்பிடுவார்கள். இந்தக் கூட்டத்தினர் சூனியத்தை மறுத்திருக்கின்றார்கள்.

இப்போது சூனியத்திற்கு வக்காலத்து வாங்கக்கூடியவர்கள் சூனியத்தை மறுக்கும் நம்மைப் பார்த்து ”இவர்கள் சொல்வது முஃதஸிலாக் கொள்கை. முஃதஸிலா கூட்டத்தைப் போன்றே இவர்களும் சூனியத்தை நம்ப மறுக்கின்றனர். முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் சூனியத்தை மறுத்ததில்லை" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தினர் புதிதாக மக்களிடம் இந்தக் கொள்கையைத் திணித்து மக்களைக் குழப்புகின்றனர் என்றும் சூனியக் கட்சியினர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தக் கொள்கை தவறு என்று இவர்கள் கருதினால் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதம் சரியல்ல என்று ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் இவர்கள் பிரச்சாரம் செய்வதில் நமக்கு மறுப்பு இல்லை. அந்தப் பிரச்சாரம் எடுபடாமல் தமது கூடாரம் காலியாகிறது என்று அவர்கள் அஞ்சினால் விவாதத்தின் மூலம் இதற்கு ஒரு முடிவு காண அவர்கள் முயல வேண்டும்.

ஆனால் தங்களுடன் இருப்பவர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் முஃதசிலா கொள்கை உடையவர்கள் என்று கூறி மக்களின் சிந்தனைக்கு திரை போடுகின்றனர்.


முஃதசிலா என்ற வழிகெட்ட பிரிவினர் சூனியத்தை மறுத்தார்கள் என்பது உண்மை. ஆனால் சூனியத்தை மறுத்ததால் தான் இவர்கள் வழிகெட்டவர்களாக கருதப்பட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்களின் அற்புதங்களை மறுத்தது உள்ளிட்ட பல கெட்ட கொள்கைகள் காரணமாகவே அவர்கள் வழிகெட்டவர்களாகக் கருதப்பட்டனர்.

முஃதசிலாக்களைக் கடுமையாக எதிர்த்த அறிஞர்கள் பலரும் சூனியத்தை மறுத்துள்ளனர். இதன் காரணமாக அவர்கள் முஃதசிலாக்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதில் இருந்து இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆம்! சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று முஃதசிலாக்கள் மட்டும் சொல்லவில்லை. முஃதசிலாக்களை எதிர்த்த நல்லறிஞர்களும் சூனியம் என்பது வெறும் கற்பனையே என்று சொல்லி இருக்கிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் இவர்கள் மறைக்கின்றனர்.

புஹாரி நூலுக்கு ஏராளமான விரிவுரை நூல்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை இரண்டு நூல்கள் தான். ஒன்று இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய பத்ஹுல்பாரி. மற்றொன்று ஐனி அவர்கள் எழுதிய உம்ததுல் காரி. பத்ஹுல் பாரியை ஷாபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். உம்ததுல் காரி நூலை ஹனபி மத்ஹபினர் தூக்கிப் பிடிப்பார்கள். புகாரியில் உள்ள ஹதீசுக்கு மாற்றமாக ஹனபி மத்ஹப் சட்டம் இருந்தால் ஐனி எப்படி சமாளிக்கிறார் என்று அறிந்து கொள்ள உம்ததுல் காரியைத்தான் ஹனபிகள் புரட்டுவார்கள்.

இந்த இரண்டு நூல்களிலும் சொல்லப்படுவதைப் பாருங்கள்.

இப்னு ஹஜர் தமது ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் சொல்வதைப் பாருங்கள்!

فتح الباري - ابن حجر - (10 / 222)

واختلف في السحر فقيل هو تخبيل فقط ولا حقيقة له وهذا اختيار أبي جعفر الاسترباذي من الشافعية وأبي بكر الرازي من الحنفية وبن حزم الظاهري وطائفة قال النووي والصحيح أن له حقيقة وبه قطع الجمهور وعليه عامة العلماء ويدل عليه الكتاب والسنة الصحيحة المشهورة انتهى

சிஹ்ர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டு. அது வெறும் கற்பனை தான்; அது உண்மையில்லை  என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஷாபி மத்ஹபில் மரியாதைக்குரிய அறிஞராக இருந்த அபு ஜஃபர் என்பவரின் கருத்து இதுதான். ஹனபி மத்ஹபின் அறிஞரான அபுபக்கர் ராசீ அவர்களின் கருத்தும் இதுதான். இப்னு ஹஸ்ம் அவர்களின் கருத்தும் இதுதான். (குர்ஆன் ஹதீஸ்களை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த வியாக்கியானங்களும் கொடுக்கக் கூடாது என்று சொல்லி வழிகெட்ட கொள்கைக்கு சிம்ம சொப்பனமாகக் கருதப்பட்டவர் இப்னு ஹஸ்ம் அவர்கள்.) இன்னும் ஒரு தொகையினரின் கருத்தும் இதுதான். சூனியத்தால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தில் தான் பெரும்பாலோர் உள்ளனர். இதைத்தான் குர்ஆன் ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன என்று நவவி கூறுகிறார்.

நான்கு மத்ஹபுக்காரர்களும் முஃதசிலாக் கொள்கையை எதிர்த்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஷாபி, ஹனபி மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் முஃதசிலாக்களை எதிர்த்த இப்னு ஹஸ்ம் அவர்களும் சூனியம் ஒரு பித்தலாட்டம் என்று சொல்லியுள்ளதாக இப்னு ஹஜர் எடுத்துக் காட்டுகிறார்.  இவ்வாறு சொன்னதற்காக மேற்கண்ட அறிஞர்களை முஃதசிலாக்கள் என்று இப்னு ஹஜர் சொல்லவில்லை. ஒன்று அதிகமானவர்களின் கருத்து; இன்னொன்று குறைவானவர்களின் கருத்து எனக் கூறுகிறாரே தவிர அவர்களை முஃதசிலாக்கள் என்று சொல்லவில்லை.

அது போல் ஹனபி மத்ஹபின் முக்கிய அறிஞரான ஐனி அவர்கள் உம்ததுல் காரி நூலில் கூறுவதைப் பாருங்கள்.

عمدة القاري شرح صحيح البخاري (14/ 62)

الأول: إِن السحر لَهُ حَقِيقَة، وَذكر الْوَزير أَبُو المظفر يحيى بن مُحَمَّد بن هُبَيْرَة فِي كِتَابه (الْأَشْرَاف على مَذَاهِب الْأَشْرَاف) : أَجمعُوا على أَن السحر لَهُ حَقِيقَة إلاَّ أَبَا حنيفَة. فَإِنَّهُ قَالَ: لَا حَقِيقَة لَهُ. وَقَالَ الْقُرْطُبِيّ: وَعِنْدنَا أَن السحر حق، وَله حَقِيقَة يخلق الله تَعَالَى عِنْده مَا شَاءَ، خلافًا للمعتزلة وَأبي إِسْحَاق الإسفرايني من الشَّافِعِيَّة، حَيْثُ قَالُوا: إِنَّه تمويه وتخيل

சூனியம் பற்றி முதல் கருத்து அது உண்மைதான் என்பதாகும். சூனியம் உண்மையான ஒன்று  என்பதில் அறிஞர்களில் அபூ ஹனீபா தவிர மற்ற அறிஞர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.சூனியத்தில் சிறிதும் உண்மை இல்லை என்று அபூ ஹனீபா சொல்கிறார் என அபுல் முளப்பர் என்பார் தனது நூலில் கூறுகிறார். சூனியம் மெய்யானது; அல்லாஹ் நாடும் போது நாடியதைப் படைப்பான் என்பது தான் என்பது தான் நம்முடைய கருத்து. முஃதசிலாக்களும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூ இஸ்ஹாக் இஸ்பிராயீனி அவர்களும் இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளனர். சூனியம் என்பது பொய்த்தோற்றமும் முலாம் பூசுதலும் தான் என்று இவர்கள் கூறுகின்றனர் என குர்துபீ கூறுகிறார்.

இவ்வாறு உம்ததுல் காரியில் சொல்லப்பட்டுள்ளது. அபூ ஹனீபா இமாமும் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த அபூஇஸ்ஹாக் அவர்களும் முஃதசிலாக்களா?

இதே கருத்தை இப்னு கசீர் அவர்களும் எடுத்துக் காட்டுகிறார்.

பிறமதத்தினர் பள்ளிவாசலுக்குள் வரலாமா?

கேள்வி - ஏன் எங்களை பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்கிறார்கள். இதற்கு தக்க பதில் கொடுத்தால் எனக்கு தாஃவா செய்வதற்கு பயன் உள்ளதாக இருக்கும். - டி.ஆபிதீன்

பதில் பி.ஜே - முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரக்கூடாது என்ற கருத்து பரவலாக மக்களிடம் உள்ளது. இது தவறான கருத்தாகும். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் இதைத் தெளிவாக அனுமதிக்கின்றன

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பள்ளியான மஸ்ஜிதுந் நபவீயில் முஸ்லிமல்லாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வைத்தார்கள். இதைப் பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்

462حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ أَطْلِقُوا ثُمَامَةَ فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنْ الْمَسْجِدِ فَاغْتَسَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَقَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ  رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிக் குதிரைப்படை பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த (யமாமா வாசிகளின் தலைவரான) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் (மக்கள்) கட்டிவைத்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்த (நாட்களில் முன்றாம் நாளின்) போது, "ஸுமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள்'' என்று கூறினார்கள். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குச் சொந்தமானன பேரீச்சந்தோட்டத்திற்குச் சென்று குளித்தார். பிறகு பள்ளீவாசலுக்குள் வந்து "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி மொழிகிறேன்'' என்றார்.

நூல் :புகாரி (462)


இணைவைப்புக் கொள்கையில் இருந்த ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாட்கள் பள்ளிவாசலில் தான் தங்க வைத்துள்ளார்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது.
4854حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثُونِي عَنْ الزُّهْرِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ فَلَمَّا بَلَغَ هَذِهِ الْآيَةَ أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَيْءٍ أَمْ هُمْ الْخَالِقُونَ أَمْ خَلَقُوا السَّمَوَاتِ وَالْأَرْضَ بَلْ لَا يُوقِنُونَ أَمْ عِنْدَهُمْ خَزَائِنُ رَبِّكَ أَمْ هُمْ الْمُسَيْطِرُونَ قَالَ كَادَ قَلْبِي أَنْ يَطِيرَ قَالَ سُفْيَانُ فَأَمَّا أَنَا فَإِنَّمَا سَمِعْتُ الزُّهْرِيَّ يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ وَلَمْ أَسْمَعْهُ زَادَ الَّذِي قَالُوا لِي رواه البخاري

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் "அத்தூர்' எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். "(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?'' எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது.

நூல் : புகாரி (4854)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் மஃக்ரிப் தொழுகை நடத்தியபோது அங்கு அவர்கள் ஓதியதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் செவியேற்றார்கள். இது மேற்கண்ட புகாரியின் அறிவிப்பில் உள்ளது

இந்தச் சமயத்தில் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் முஸ்லிமாக இருக்கவில்லை. இணைவைப்புக் கொள்கையில் இருந்தார்கள். இது கூடுதலாக முஸ்னது ஹுமைதி என்ற நூலில் ஆதாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

مسند الحميدي  - أحاديث جبير بن مطعم رضي الله عنه



 حديث : ‏539‏24954 

 حدثنا الحميدي قال : ثنا سفيان قال سمعت الزهري يحدث عن محمد بن جبير بن مطعم ، عن أبيه أنه " سمع رسول الله صلى الله عليه وسلم يقرأ في المغرب بالطور " قال سفيان : قالوا في هذا الحديث : إن جبيرا قال : " سمعتها من النبي صلى الله عليه وسلم وأنا مشرك فكاد قلبي أن يطير " ولم يقله لنا الزهري *

நான் இணைவைப்பவனாக இருக்கும் நிலையில் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன்.

நூல் : முஸ்னது ஹுமைதி


எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இணைவைப்பவர்கள் பள்ளிக்குள் வரும் நிலை இருந்துள்ளது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்யாமல் அனுமதித்து இருந்தார்கள்.

சகீஃப் குலத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நேரடியாக பேசி இஸ்லாத்தில் இணைந்து கொள்வதற்காக வந்தனர். இன்னும் இஸ்லாத்தை ஏற்றிராத நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களை பள்ளிவாசலில் தங்க வைத்தார்கள்.

3917أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ قَالَ سَمِعْتُ أَوْسًا يَقُولُ أَتَيْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَفْدِ ثَقِيفٍ فَكُنْتُ مَعَهُ فِي قُبَّةٍ فَنَامَ مَنْ كَانَ فِي الْقُبَّةِ غَيْرِي وَغَيْرُهُ فَجَاءَ رَجُلٌ فَسَارَّهُ فَقَالَ اذْهَبْ فَاقْتُلْهُ فَقَالَ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالَ يَشْهَدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَرْهُ ثُمَّ قَالَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَإِذَا قَالُوهَا حَرُمَتْ دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ إِلَّا بِحَقِّهَا قَالَ مُحَمَّدٌ فَقُلْتُ لِشُعْبَةَ أَلَيْسَ فِي الْحَدِيثِ أَلَيْسَ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ قَالَ أَظُنُّهَا مَعَهَا وَلَا أَدْرِي  رواه النسائي

நுஃமான் பின் சாலிம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

சகீஃப் கூட்டதாருடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வந்தேன். ஒரு கூடாரத்தில் நான் அவர்களுடன் உறங்கினேன்.

நூல் : நஸாயீ (3917)


மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலுக்கு மட்டுமே இணைவைப்பாளர்கள் வரக்கூடாது என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ فَلَا يَقْرَبُوا الْمَسْجِدَ الْحَرَامَ بَعْدَ عَامِهِمْ هَذَا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنْ شَاءَ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ (28)9

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது.

அல்குர்ஆன் (9 : 28)


இதிலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் அல்லாத மற்ற எந்தப் பள்ளிகளானாலும் இணைவைப்பாளர்கள் உள்ளே செல்வது குற்றமில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் வரும் போது நல்ல விசயங்களைப் பார்க்கும் வாய்ப்பும் நல்ல விசயங்களைக் கேட்கும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கின்றது. இதன் மூலம் அவர்கள் முஸ்லிமாகவும் மாறலாம். எனவே மார்க்கம் அனுமதித்த இந்தக் காரியத்தை யாரும் தடை செய்யக் கூடாது.

Monday, February 2, 2015

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டுமா?

வேலைக்குச் செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிய முடிவதில்லையே. எப்படி வேலைக்குச் செல்வது.

அரசு அலுவலகங்களில் இவ்வாறு நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

தனியார் நிறுவனங்களில் இவ்வாறு நடந்து கொண்டால் என்ன செய்ய வேண்டும்?


ஹதீஸ்கள் குர்ஆனிற்கு முரண்படுமா? - தொடர் 17

1. பல்லிகளைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)

நூல் : புகாரி (3307)

2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (அலை அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்ட போது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)

நூல் : புகாரி (3359)


முதல் அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளை மாத்திரம் இடம் பெற்றுள்ளது. ஆனால் இரண்டாவது அறிவிப்பில் பல்லிகளைக் கொல்ல வேண்டும் என்ற கட்டளையோடு இப்ராஹிம் நபியவர்களுக்கு எதிராக பல்லிகள் நெருப்பை ஊதிவிட்டன என்ற செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

பல்லி தொடர்பான செய்தியை உம்மு ஷரீக்கிடமிருந்து சயீத் என்பார் அறிவிக்கிறார். சயீத் என்பாரிடமிருந்து அப்துல் ஹுமைத் என்பார் அறிவிக்கிறார். அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் ஆகிய இருவரும் அறிவிக்கிறார்கள்.

அப்துல்ஹுமைத் என்பவருக்கு சுஃப்யான் மற்றும் இப்னு ஜுரைஜ் என்ற இரண்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜிடமிருந்து இப்னு வஹப், ரவ்ஹ், முஹம்மத் பின் பக்ர். அபூ ஆசிம் மற்றும் உபைதுல்லா ஆகிய ஐந்து நபர்கள் அறிவிக்கிறார்கள். இப்னு ஜுரைஜிற்கு ஐந்து மாணவர்கள் உள்ளனர்.

இவர்களில் உபைதுல்லாவைத் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாணவர்களும் இப்னு ஜரைஜிடமிருந்து இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தைக் கூறாமல் பல்லியைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்பதை மட்டுமே அறிவிக்கிறார்கள்.

உபைதுல்லாஹ் மட்டும் அந்த நான்கு நபர்களுக்கு மாற்றமாக இப்ராஹிம் நபிக்கு எதிராக பல்லி நெருப்பை ஊதி விட்டது என்ற வாக்கியத்தையும் சேர்த்து அறிவிக்கிறார். இப்னு வஹப் ரவ்ஹ் முஹம்மத் பின் பக்ர் மற்றும் அபூ ஆசிம் ஆகிய நான்கு நபர்கள் ஒரே மாதிரி அறிவிப்பதால் இவர்களுடைய அறிவிப்புத் தான் சரியான அறிவிப்பு. இவர்களுக்கு மாற்றமாக உபைதுல்லாஹ் மட்டும் தனித்து அறிவிப்பதால் இவரது அறிவிப்பு நிராகரிக்கப்பட வேண்டியது.

அப்துல் ஹுமைத் என்பாரிடமிருந்து இப்னு ஜ,ýரைஜ் மற்றும் சுஃப்யான் அறிவிப்பதாக முன்பே கூறினோம். சுஃப்யான் அவர்களும் அந்த நான்கு நபர்கள் அறிவிப்பதைப் போன்றே பல்லி நெருப்பை ஊதிவிட்ட தகவலைக் கூறாமல் அதைக் கொல்ல வேண்டும் என்பதை மட்டும் கூறுகிறார். உபைதுல்லாஹ் தான் நெருப்பை ஊதிவிட்டத் தகவலை தவறுதலாக கூறியுள்ளார் என்று இதன் மூலமும் புரிந்து கொள்ளலாம்.

உறுதிமிக்க நம்பகமானவர்கள் பலர் அறிவிக்கும் செய்திக்கு நம்பகமான ஒருவர் மாற்றமாக அறிவித்தால் அந்த ஒருவருடைய செய்திக்கு ஷாத் (பின்தள்ளப்பட்ட செய்தி) என்று ஹதீஸ் கûலியில் சொல்வார்கள். உறுதி மிக்கவர்கள் அறிவிக்கும் செய்தி மஹ்ஃபூள் (முன்னுரிமை தரப்பட்ட செய்தி) என்று சொல்லுவார்கள்.

இந்த அடிப்படையில் பல்லி நெருப்பை ஊதி விட்டது என்று உபைதுல்லாஹ் மட்டும் அறிவிக்கும் செய்தி பின்தள்ளப்பட்ட செய்தியாகும். எனவே புகாரியில் இடம்பெற்றிருக்கிதே என்றெல்லாம் குருட்டுத்தனமாக பேசாமல் இந்த ஹதீஸ் கலை விதிக்கு கட்டுப்பட்டு நடப்பதே அறிவாளிகளின் வழியாகும்.

ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலக அறிவிக்கப்பட்ட செய்தியின் உண்மை நிலை

பல்லி நெருப்பபை ஊதிவிட்ட சம்பவம் ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். அவர்களின் வீட்டில் ஈட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். முஃமின்களின் தாயே இதை (இந்த ஈட்டியை) வைத்து தாங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இதை வைத்து நாங்கள் பல்லிகளைக் கொல்வோம். ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (இவ்வாறு) சொன்னார்கள். இப்ராஹிம் (அலை) அவர்கள் நெருப்பில் போடப்பட்ட போது பல்லியைத் தவிர பூமியிலிருந்த எல்லா உயிரினமும் நெருப்பை வாயால் ஊதி அனைத்தது. ஆனால் பல்லி மாத்திரம் அவர்களுக்கு எதிராக (நெருப்பை) ஊதிவிட்டது. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கொல்லும்படி கட்டளையிட்டார்கள் என்று ஆயிஷா கூறினார்.

அறிவிப்பவர் : சாயிபா

நூல் : இப்னு மாஜா (3222)


இதே செய்தி அஹ்மதில் (23393) (24643) (23636) ஆகிய எண்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


ஆயிஷா (ரலி) அவர்களிடம் இந்தச் செய்தியை அறிவிக்கும் சாயிபா என்ற பெண்மனியின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. இவர் நம்பகமானவர் தான் என்று இப்னு ஹிப்பானைத் தவிர வேறுயாரும் சான்றளிக்கவில்லை. இப்னு ஹிப்பான் அறியப்படாத ஆட்களுக்கெல்லாம் நம்பகமானவர் என்று சான்றுதரக் கூடியவர் என்பதால் அவருடைய கூற்றை ஆதாரமாக எடுக்கலாகாது. எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக பின்வருமாறு ஹதீஸ் அஹ்மதில் இடம்பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை நீங்கள் கொல்லுங்கள். ஏனென்றால் அது இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எதிராக நெருப்பை ஊதிவிட்டது. ஆயிஷா (ரலி) அவர்கள் பல்லிகளை கொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று (உர்வா என்ற அறிவிப்பாளர்) கூறியுள்ளார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் (24463)


இந்த ஹதீஸில் சாயிபா இடம்பெறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின்அப்திர் ரஹ்மான் என்ற நபர் இடம்பெறுகிறார். இவரது நம்பகத்தன்மைûயும் யாராலும் நிரூபிக்கப்படவில்லை. இவர் யாரென்றும் தெரியவில்லை. எனவே இந்த செய்திக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Sunday, February 1, 2015

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் - தொடர் 16 - பி.ஜே

ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட மொழிபெயர்ப்பு

சுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் படித்துக் காட்டியதை அவர்கள் பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை; மாறாக, ஷைத்தான்களே நிராகரித்தனர். அவர்கள் மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் ஆகிய இரு வானவர்களுக்கு அருளப்பெற்ற(தாக அவர்களே சொல்லிக்கொண்ட)தையும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அவ்விருவரும் "நாங்கள் (இறைவனிடமிருந்து வந்துள்ள) ஒரு சோதனையாக உள்ளோம். எனவே, (இறையை) நிராகரிக்க வேண்டாம்" என்று கூறாத வரை யாருக்கும் அதைக் கற்றுக் கொடுப்பதில்லை (என்றும்), ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்). அதன் மூலம் அல்லாஹ்வின் உத்தரவின்றி யாருக்கும் அவர்கள் தீங்கிழைக்க இயலாது. அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும் பயன் தராததையுமே கற்கின்றனர். இதைக் கொள்முதல் செய்தவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் கிடையாது என்பதை அவர்கள் உறுதியாகத் தெரிந்தே உள்ளனர். எதற்குப் பதிலாகத் தங்களை அவர்கள் விற்றார்களோ அது மிகவும் தீயது. (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!

இந்த மொழி பெயர்ப்பு முன்னர் நாம் எடுத்துக்காட்டிய மொழி பெயர்ப்புகளில் இருந்து வேறுபட்டுள்ளதைக் கவனிக்கவும்.

முன்னர் நாம் சுட்டிக்காட்டிய இரு மொழி பெயர்ப்புகளைப் போல் மொழி பெயர்த்தால் அது இணை கற்பித்தலில் தள்ளிவிடும் என்று அஞ்சி இதை அல்லாஹ்வின் கூற்றாக காட்டாத வகையில் மொழி பெயர்த்துள்ளனர்.

ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவினை உருவாக்கக்கூடியதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றனர் (என்றும் கூறிவந்தனர்)

கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தக் கூடியதை கற்றுக் கொண்டார்கள் என்ற சொல் அல்லாஹ்வின் கூற்று அல்ல. மாறாக யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்ற கருத்தை தருவதற்காக (என்றும் கூறிவந்தனர்) என்று அடைப்புக்குறிக்குள் போட்டுள்ளனர். யூதர்கள் இப்படி சொல்லிக் கொண்டார்கள் என்பதை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான் என்ற கருத்தைத் தரும் வகையில் மொழி பெயர்ப்பு செய்துள்ளனர்.

சூனியத்தால் கணவன் மனைவியைப் பிரிக்க முடியும் என்று யூதர்கள் கூறினார்கள் என்று அர்த்தம் செய்தால் இது சூனியக் கட்சியினருக்கு ஆதாரமாகாது. யூதர்கள் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப சொன்னார்கள் என்ற செய்தியைத் தவிர வேறு ஒரு கருத்தும் இதில் இல்லை.

ரஹ்மத் ட்ர்ஸ்ட் நிறுவன அறிஞர்கள் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று அல்லாஹ் எப்படிச் சொல்வான் என்றும் அப்படிச் சொன்னால் பல வசனங்களுக்கு முரணாகி விடும் என்றும் அஞ்சி மேற்கண்ட சொல் யூதர்களின் சொல் என்ற கருத்தைத் தந்துள்ளனர்.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் அர்த்தம் வராத வகையிலும், குர்ஆனின் மற்ற வசனங்களுக்கு முரணில்லாத வகையிலும் இப்படி மொழி பெயர்த்தால் அதில் நமக்கு மறுப்பு ஏதும் இல்லை.

சூனியத்துக்கு ஆற்றல் உள்ளது என்று சொல்பவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாக இன்னொரு வாதத்தையும் எடுத்து வைப்பார்கள்.

திருக்குர் ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட போது இறங்கியதாகவும் ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்பது அவர்களின் வாதம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட முடியாது என்பதை தக்க ஆதாரங்களுடன் நாம் முன்னர் நிரூபித்துள்ளோம்.

அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்ற செய்தியே பொய் என்று ஆகிவிடும் போது அதற்காகத் தான் இவ்விரு வசனங்களும் அருளப்பட்டன என்ற செய்தியும் கட்டுக்கதையாகி விட்டது.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற செய்தி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில் உள்ளதால் அது கட்டுக் கதை என்கிறோம்.

ஆனால் இந்த அத்தியாயங்கள் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டது குறித்து அருளப்பட்டது என்பதற்கு ஏற்கத்தக்க அறிவிப்பாளர் கிடையாது எனும் போது இது எப்படி ஆதாரமாக அமையும்?

இது குறித்து இப்னு கஸீர் அவர்கள் செய்யும் விமர்சனத்தைப் பாருங்கள்!

وقال الأستاذ المفسر الثعلبي في تفسيره قال ابن عباس وعائشة رضي الله عنهما كان غلام من اليهود يخدم رسول الله صلى الله عليه وسلم.... ثم بعث النبي صلى الله عليه وسلم عليا والزبير وعمار بن ياسر فنزحوا ماء البركة كأنه نقاعة الحناء ثم رفعوا الصخرة وأخرجوا الجف فإذا فيه مشاطة رأسه وأسنان من مشطه وإذا فيه وتر معقود فيه اثنا عشر عقدة مغروزة بالإبرة فأنزل الله تعالى السورتين فجعل كلما قرأ آية   انحلت عقدة  ووجد رسول الله صلى الله عليه وسلم خفة حين انحلت العقدة الأخيرة فقام كأنما نشط من عقال وجعل جبريل عليه السلام يقول بسم الله أرقيك من كل شيء يؤذيك من حاسد وعين الله يشفيك فقال يا رسول الله أفلا ينفذ الخبيث نقتله فقال رسول الله صلى الله عليه وسلم أما أنا فقد شفاني الله وأكره أن أثير على الناس شرا هكذا أورده بلا إسناد فيه غرابة وفي بعضه نكارة شديدة ولبعضه نكارة شديدة ولبعضه شواهد مما تقدم والله أعلم  -

 تفسير ابن كثير ج: 4 ص: 575

திருக்குர்ஆன் விரிவுரையாளரான ஸஃலபி அவர்கள் தமது தப்சீரில் கூறுகிறார். நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்ட பின் அலீ, சுபைர், அம்மார் பின் யாசிர் ஆகியோரை நபியவர்கள் அனுப்பினார்கள். அவர்கள் கிணற்றின் நீரை இறைத்தார்கள். அந்த நீர் மருதானி சாறைப் போல் இருந்தது. பின்னர் பாறாங்கல்லை நீக்கினார்கள். பேரீச்சம் பாளையின் உறையை வெளியே எடுத்தார்கள். அதில் நபியவர்களின் தலைமுடியும் அவர்களின் சீப்புடைய பற்களும் இருந்தன. ஊசியில் கோர்க்கப்பட்ட நூலும் பன்னிரண்டு முடிச்சுக்கள் போடப்பட்டு இருந்தன. அப்போதுதான் 113, 114 அத்தியாயங்கள் அருளப்பட்டன. ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்தன...... இப்படி ஒரு செய்தியை ஸஃலபீ கூறுகிறார். ஆயிஷா, இப்னு அப்பாஸ் கூறியதாக மட்டும் தான் இதில் உள்ளது. அவ்விருவரும் யாரிடம் சொன்னார்கள் என்று நூலாசிரியர் வரை இணைக்கும் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் கூறியுள்ளார். இதில் சொல்லப்படும் சில விஷயங்கள் ஆதாரப்பூர்வமான செய்தியுடன் முரண்படுவதாக உள்ளது. யாரும் சொல்லாததாகவும் உள்ளது என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் சொல்லப்படும் எந்த ஹதீசும் கட்டுக்கதைக்கு நிகரானது என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இது போல் இப்னு ஹஜர் அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்கள்.

وقد وقع في حديث بن عباس فيما أخرجه البيهقي في الدلائل بسند ضعيف في آخر قصة السحر الذي سحر به النبي  صلى الله عليه وسلم  أنهم وجدوا وترا فيه إحدى عشرة عقدة وأنزلت سورة الفلق والناس وجعل كلما قرأ آية   انحلت عقدة  وأخرجه بن سعد بسند آخر منقطع عن بن عباس أن عليا وعمارا لما بعثهما النبي  صلى الله عليه وسلم لاستخراج السحر وجدا طلعة فيها إحدى عشرة عقدة فذكر نحوه  -

فتح الباري ج: 10 ص: 225

11 முடிச்சுக்கள் போடப்பட்டதாகவும் அது குறித்து பலக் நாஸ் ஆகிய அத்தியாயங்கள் அருளப்பட்டதாகவும் ஒவ்வொரு வசனம் அருளப்பட்டவுடன் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்ததாகவும் பைஹகீ அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் தலாயிலுன்னுபுவ்வா என்ற தமது நூலில் கூறுகிறார். அது போல் இப்னு சஅது இப்னு அப்பாஸ் வழியாக அறிவிப்பாளர் தொடர் அறுந்த செய்தியைப் பதிவு செய்துள்ளார் என்று இப்னு ஹஜர் விமர்சனம் செய்துள்ளார்.
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner