Wednesday, February 29, 2012

பெண்கள் அன்னிய ஆண்களுடன் பேசலாமா?

  • பொதுவாக ஆண்கள் தாடி வைத்து மார்க்கத்தை பின்பற்றுபவர்களிடம் பேசும் பெண்கள் மற்றும் தாடி இல்லாமல் சராசரியான ஆண்களிடம் பேசும் பெண்களின் வேறுபாடு என்ன?
  • பெண்கள் உடை விசயத்தில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா?
  • பெண்கள், ஆண்களிடம் பேசுவதற்கு மார்க்கம் தடை செய்துள்ளதா?
  • பெண்கள் ஆண்களிடம் எவ்வாறு பேச வேண்டும்?

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 2

காலில் விழலாமா?

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
 
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)  நூல்: அபூதாவூத் 1828


தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.

காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

பெண்ணுக்கு நாணம் வேண்டும் - ஃபைரோஸ் பானு, தொண்டி

மனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும் ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.

இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர். மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. 
 
அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா? கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?

கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே) என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவள் மவுனமாக இருப்பதே அனுமதி என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136

அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம் என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?
 

ஹஜ் செல்பவர்கள் மஸ்ஜிதுந் நபவியில் 100 ரக்அத்துக்கள் கண்டிப்பாக தொழ வேண்டுமா?

கேள்வி - ஹஜ் செல்பவர் கண்டிப்பாக மஸ்ஜிதுந் நபவிக்குச் செல்ல வேண்டுமா? அங்கு 100 ரக்அத்கள் தொழ வேண்டுமா?

பதில் - ஹஜ் செல்பவர் மதீனாவிற்கு - மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்ல வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது கட்டாயம் என்றும் கூறவில்லை. ஒருவர் ஹஜ் செய்யச் சென்று எல்லா கடமைகளையும் நிறைவேற்றிய பின்னர் மதீனா செல்லாமல் ஊர் திரும்பினாலும் அவருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஹஜ் கடமைகளில் மதீனா செல்வதும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதும் இல்லை.

எனினும் ஒருவர் நன்மையை நாடி மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழுது வந்தால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. அவருக்கு மற்ற பள்ளியில் தொழும் தொழுகையை விடக் கூடுதல் நன்மை கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம்  மேற்கொள்ளப்படாது.  நூல்: புகாரி 1189

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.  நூல்: புகாரி 1190

மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது என்பதால் எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாம். இத்தனை ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.

- பி.ஜே

Tuesday, February 28, 2012

மத்ஹபு இமாம்களை பின்பற்றலாமா?

  • ஹதீஸ்களை தேடித்தந்த மத்ஹபு இமாம்களை பின்பற்றினால் தவறா?
  • ஹதீஸ்களை தொகுத்த புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்களை பின்பற்றலாமா?
  • புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நுால்களில் தவறே கிடையாதா?
  • நபி(ஸல்) அவர்கள் ஒரு செயலை ஒன்று, இரண்டு, மூன்றாக பிரித்து செய்திருப்பார்கள். அது போன்று தான் மத்ஹபையும் அமைத்துள்ளார்களா?

கொள்கை விளக்கம் - பி.ஜே - தொடர் 1

பைஅத், முரீது (தீட்சை)

மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம்.

'ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார்' என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா? 'எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது' என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது. அறிவிப்பவர் : அனஸ் (ரலி)  நூல் : திர்மிதீ 3511

'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு  பின் ஆஸ் (ரலி)  நூல் : முஸ்லிம் 4798

'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை'
என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.

இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது

'இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!' என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959

தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த முடியும்?
 

Monday, February 27, 2012

இஸ்லாமிய அரசாங்கம் அமைப்பது முஸ்லிம்களின் கடமையா?

  1. இஸ்லாமிய அரசாங்கம் பற்றி குர்ஆன், ஹதீஸின் நிலைபாடு என்ன?
  2. இஸ்லாத்தில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவது தான் இலட்சியமா?
  3. அல்லாஹ் அனுப்பிய துாதர்கள் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வந்தார்களா?
  4. இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
  5. இஸ்லாமிய ஆட்சி அமைப்போம் என்று முழங்குவதால், இஸ்லாத்திற்கு பின்னடைவா?

இறந்தோரை அவுலியா (இறைநேசர்) என நாம் தீர்மானிக்க இயலுமா? - கே.எம். அப்துந் நாஸிர் - கடையநல்லூர்.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள். இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மாற்றுதல் என்பது இல்லை. அதுவே மகத்தான வெற்றி.  (அல்குர்ஆன் 10 : 62, 63, 64)

இவ்வசனத்தைச் சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறை நேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.

மேலும் அடுத்த வசனத்தில் இறை நேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.

யார் இறை நேசர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே மகான்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.

மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத்தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையிலும் அவர் நல்லவர்தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது. இதற்கு நாம் பல்வேறு சான்றுகளைப் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்க்கவிருக்கிறோம்.

ஹராமான பொருள் அன்பளிப்பாக கிடைத்தால் வாங்கலாமா?


ஹராமான பொருளை அன்பளிப்பாக கொடுக்கலாமா?

ஹராமான தொழில் செய்பவர் அன்பளிப்பு கொடுத்தால் வாங்கலாமா?

Sunday, February 26, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 12 - முடிவுற்றது

இறைவனிடம் கையேந்துங்கள்

சகல வல்லமையும் படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பாதுகாப்புத் தேடுமாறு திருக்குர்ஆ நமக்குக் கற்றுத்தருகிறது. ஷைத்தானிடமிருந்து தப்பிப்பதற்கு அற்புதமான இந்த வழியை விட்டால் வேறு வழி இல்லை.

ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  அல்குர்ஆன் (7 : 200)

 
ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.  அல்குர்ஆன் (41 : 36)


"என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் "என் இறைவா! என்னிடம் அவர்கள் வருவதை விட்டும் உன்னிடம்  பாதுகாப்புத் தேடுகிறேன்.'' என்றும் கூறுவீராக!  அல்குர்ஆன் (23 : 97)

(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத்  தேடுகிறேன் என்று கூறுவீராக!  அல்குர்ஆன் (114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு) பிரார்த்திப்பார்கள். இறைவா உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து மரணிப்பதை விட்டும் இடிபாடுகளுக்குள் சிக்கி  மரணிப்பதை விட்டும் நீருக்குள் மூழ்கி மரணிப்பதை விட்டும் நெருப்பில் கருகி மரணிப்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். மரண வேளையில் ஷைத்தான் என்னை தீண்டுவதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னுடைய வழியை விட்டு புறக்கணித்தவனாக நான் மரணிப்பதை விட்டும் (விஷ ஜந்துக்களால்) தீண்டப்பட்டு மரணிப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.  அறிவிப்பவர் : அபுல் யசர் (ரலி)  நூல் : நஸயீ (5436)

குர்ஆனை ஓதும் போது....

முக்கியமான சில இடங்களில் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு இஸ்லாம் கற்றுத்தருகிறது. இதை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படுவோம்.

நீ குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத்  தேடிக்கொள்!   அல்குர்ஆன் (16 : 98)

ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கலாமா? - புதியது விரிவுபடுத்தப்பட்டுள்ளது

கேள்வி - ஆண்கள் குப்புறப் படுத்துத் தூங்கக் கூடாது என்றும் பெண்கள் நிமிர்ந்து படுத்துத் தூங்கக் கூடாது என்றும் கூறுகின்றார்களே! இதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா? -  எம். அபூபக்ர், திருமங்கலக்குடி

கேள்வி - குப்புறப்படுத்து தூங்கலாமா? வயிற்றைக் கீழே வைத்து குப்புறப் படுக்கலாமா?


பதில் - குறிப்பு - இந்த ஹதீஸின் நுணுக்கமான குறைபாடுகலைக் கவனிக்காமல் குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்று முன்னர் கூறி இருந்தோம் என்பதையும் அதை மாற்றிக் கொண்டோம் என்பதையும் தகவலுக்காகப் பதிவு செய்கிறோம்.

குப்புறப்படுத்து தூங்கக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அறிவிப்பாளர் தொடரில் பல குறைபாடுகளைக் கொண்டதாக உள்ளன.

இந்த அறிவிப்பாளர் தொடர் குறித்த விமர்சனம் நுணுக்கமானதாக இருந்தாலும் இதை சரியான ஹதீஸ் என்று சிலர் வாதிடுவதால் விரிவாகவே இதை விளக்குகிறோம்.

முதல் ஹதீஸ்

2692    حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ وَعَبْدُ
الرَّحِيمِ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي
هُرَيْرَةَ قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا
مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ ضَجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ
وَفِي الْبَاب عَنْ طِهْفَةَ وَابْنِ عُمَرَ قَالَ أَبُو عِيسَى وَرَوَى يَحْيَى
بْنُ أَبِي كَثِيرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ يَعِيشَ بْنِ
طِهْفَةَ عَنْ أَبِيهِ وَيُقَالُ طِخْفَةُ وَالصَّحِيحُ طِهْفَةُ وَقَالَ بَعْضُ
الْحُفَّاظِ الصَّحِيحُ طِخْفَةُ وَيُقَالُ طِغْفَةُ يَعِيشُ هُوَ مِنْ
الصَّحَابَةِ  رواه الترمدي

7524 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى
اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ
هَذِهِ لَضِجْعَةٌ مَا يُحِبُّهَا اللَّهُ عَزَّ وَجَلَّ  رواه أحمد

7698 حَدَّثَنَا أَبُو كَامِلٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو
عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ إِنَّ هَذِهِ
ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ  رواه أحمد

ஒருமனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை நபியவர்கள் பார்த்தார்கள். இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.  அறிவிப்பவர்  அபூ ஹூரைரா (ரலி)  நூல் திர்மிதி (2692)  அஹ்மது (7524, 7698)

திர்மிதி, மற்றும் அஹ்மதில் முதல் மூன்று அறிவிப்பாளர்கள் பின்வருபவர்கள் ஆவர்.

நபியவர்களிடமிருந்து அபூ ஹூரைரா (ரலி)

அபூ ஹூரைராவிடமிருந்து அபூ ஸலமா

அபூ ஸலமாவிடமிருந்து முஹம்மது பின் அமர்

இந்த அறிவிப்பாளர் வரிசையில் வருவது ஸஹீஹானது – ஆதாரப்பூர்வமானது - கிடையாது என இமாம் புகாரி அவர்கள் கூறுகின்றனர். 

(التاريخ الصغير - (ج 1 / ص 152)

682 - وقال محمد بن عمرو عن أبي سلمة عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله
عليه و سلم نحوه ولا يصح

ஆய்வு செய்யாமல், கண்மூடித்தனமாக பின்பற்றுவது பாவமா?


Saturday, February 25, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 11

மனிதனாக உருமாறுவானா?

ஷைத்தான் மனித வடிவில் உருவெடுப்பான் என்று கூறுபவர்கள் கீழ்கண்ட ஹதீஸை ஆதாரமாக காட்டுவார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா)  ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.  அப்போது ஒருவன் இரவில்  வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான்.  அவனை நான் பிடித்து, “உன்னை நபி (ஸல்)  அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறுகிறேன்.  அதற்கவன், “நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது!” என்று கூறினான்.  அவனை நான் விட்டுவிட்டேன்.  விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன்.  

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்!” என்றார்கள்.  “மீண்டும் வருவான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன்.  அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன்.  “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்!” என்று கூறினேன்.  அதற்கவன், “என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்!” என்றான்.  அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்.  விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் “அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்?” என்று கேட்டார்கள். 

நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்!” என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்!” என்றார்கள்.  

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான்.  அவனைப் பிடித்து, “உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்( (ஒவ்வொரு முறையும்) “இனிமேல் வரமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். 

மாமனார், மாமியார் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமா? அல்லது மனைவியின் பேச்சை கேட்டு நடக்க வேண்டுமா?

கேள்வி - தன் கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றான். இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920) ஹதீஸின் கருத்துக்கு இது எதிரானது இல்லையா?

பதில் - நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.

யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். அல்குர்ஆன்  37:17,18

மாமியார் ஆகட்டும்; அல்லது மருமகள் ஆகட்டும்; நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்று  நடக்கும் பண்பாடு நம்மிடம் வர வேண்டும். தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம் என்று மாமியார் நடக்கக் கூடாது. இதைப் போன்று வயதில் மூத்த மாமனார், மாமியாரை அவமதிக்கும் விதமாகவும், அவர்களின் நல்ல கருத்துக்களைக் கூட அவமதிக்கும் விதமாகவும் மருமகள் நடக்கக் கூடாது. குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து மகனைப் பிரிக்கும் மாபாதகமான காரியத்தைச் செய்யக் கூடாது. மேலும் பெற்றோரின் பேச்சைக் கேட்க விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும்படி கணவனை மாற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகப் பெரிய தீமை செய்யத் தூண்டியவராக கருதப்படுவார்.

இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 6675

பெற்றோரைப் புண்படுத்தும் காரியத்தைத் தம் கணவர் செய்து பெரும் பாவியாக மாற மனைவியே காரணமாக இருக்கக் கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முன்வர வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையைச் செய்யக் கூடாது.

- பி.ஜே

இமாம் லுஹர் மற்றும் அஸர் தொழுகையில் ஏன் சப்தமாக ஓதுவதில்லை?

கேள்வி - பஜ்ர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் இமாம் சப்தமிட்டு ஓதுகிறார். ஆனால் லுஹர், அஸர் தொழுகையில் அவ்வாறு ஓதுவதில்லையே ஏன்?
 
பதில் - வணக்க வழிபாடுகளில் சில காரியங்களுக்குக் காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பல காரியங்களுக்குக் கூறப்படவில்லை. எதில் காரணம் கூறப்படவில்லையோ அதற்குக் காரணம் தேடிச் செல்ல வேண்டியதில்லை! அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே சரியானதாகும்! அந்த வகையைச் சார்ந்ததே இந்த கேள்வியும்.

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் எதிரிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் சப்தமில்லாமலும் இரவு நேரத்தில் சப்தமிட்டும் ஓதி வந்தார்கள் என்று சிலர் இதற்குக் காரணம் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் இக்காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை!

இஷா, பஜ்ர் நேரங்களில் தான் சப்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும். சிறிய அளவில் சப்தம் வந்தால் கூட அனைவருக்கும் தெரிந்து விடும்! மேலும் மஃரிப் நேரம் அனைவரும் விழித்திருக்கும் நேரம் தான். எனவே அவர்கள் என்ன காரணத்திற்காக என்று குறிப்பிட்டார்களோ அதுவே இதற்குப் பொருந்தாததாக உள்ளது.

உங்கள் கேள்விக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழகாக தெளிவாகப் பதிலளித்துள்ளார்கள்.

எல்லாத் தொழுகைகலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் (உன் தொழுகை) நிறைவேறி விடும் ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும். நூல்: புகாரி 772

- பி.ஜே.

Friday, February 24, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 10

ஷைத்தானின் சபதம்

ஆணவத்தால் வழிகெட்ட ஷைத்தான் ஆதமுடைய மக்கள் அனைவரையும் வழிகெடுப்பேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்தான். கடும் முயற்சி செய்து மக்கள் அனைவரையும் நரகத்தில் தள்ளுவது தான் ஷைத்தானுடைய முழு நோக்கமாகும். மக்களை வழிகெடுப்பதற்காகத் தான் அவன் இறைவனிடம் அவகாசம் கேட்டான். 

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்து விட்டான். "உன் அடியார்களில் குறிப்பிட்ட தொகையினரை வென்றெடுப்பேன்'' என்று அவன் (இறைவனிடம்) கூறினான்.
 
"அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.  அல்குர்ஆன் (4 : 118.119)


"நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்'' என்று கூறினான். "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்'' (என்றும் கூறினான்).  அல்குர்ஆன் (7 : 16.17)

"என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழி கெடுப்பேன்'' என்று கூறினான்.

"இதோ என்னிடம் நேரான வழி உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.  அல்குர்ஆன் (15 : 40)

வெள்ளைப் பெண்கள் தான் வேண்டும் என்று தவ்ஹீத் வாதிகள் கேட்கின்றார்களே? இது சரியா?

Thursday, February 23, 2012

பெண்கள் வெளியே செல்லும் போது அலங்கரிக்கலாமா?


Wednesday, February 22, 2012

சிரிப்பின் ஒழுங்குகள் - அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி

நபியவர்களைச் சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.

(நபியவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று  கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரி 2348

 
(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கி கரித்து விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன்) சுபிட்ச மிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். 

தூதர் வேறு, நபி வேறா?

கேள்வி - வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியிருக்கின்றேன் என்று இறைவன் கூறுகின்றான். இரண்டும் வெவ்வேறு என்றால் "முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கிறார்'' என்ற வசனத்தின் படி தூதர் வேறு, நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா? -  சாதிக், சென்னை.

பதில் - திருக்குர்ஆனில் பல இடங்களில் "வேதத்தையும் ஞானத்தையும்' என்று "உம்மைப் பொருள்'' பயன்படுத்தப் படுவதால் வேதம் வேறு, ஞானம் வேறு என்று நாம் கூறி வருவது உண்மை தான். வேதத்துக்கு நபிமார்கள் அளித்த விளக்கம் தான் ஞானம் என்று நாம் கூறி வருகின்றோம்.

முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராகவும் நபிமார்களுக்கு முத்திரையாகவும் இருக்கின்றார். (அல்குர்ஆன் 33:40) என்ற வசனத்திலும் தூதராகவும் முத்திரையாகவும் என்று "உம்மைப் பொருள்' பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே இங்கேயும் தூதர் வேறு நபி வேறு என்று பொருள் கொள்ளலாமா? என்று இரண்டையும் ஒப்பிட்டுக் கேட்டுள்ளீர்கள்.

இரண்டுக்கும் இடையேயுள்ள மிக முக்கியமான வேறுபாட்டை நீங்கள் கவனிக்காததால் இவ்வாறு கேட்டுள்ளீர்கள். வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இது போன்ற கேள்விகளைக் கேட்க முடியாது.

இதைப் புரிந்து கொள்வதற்காக பின்வரும் இரண்டு வாக்கியங்களைக் கவனியுங்கள்.

1. சாதிக்கும் ஸாஜிதும் வந்தனர்.

2. சாதிக் சிவப்பாகவும் ஒல்லியாகவும் இருக்கின்றான்.

இவ்விரண்டு வாக்கியங்களிலும் "உம்மைப் பொருள்' தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் முதல் வாக்கியத்தில் சாதிக் வேறு, ஸாஜித் வேறு என்று புரிந்து கொள்கின்றீர்கள்.

இரண்டாவது வாக்கியத்திலும் "உம்மைப் பொருள்' பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் சிவப்பாக ஒரு சாதிக்கும், ஒல்லியாக இன்னொரு சாதிக்கும் வந்தார்கள் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். ஒரே நபர் தான் வந்தார். நிறத்தைக் கவனித்து சிவப்பாகவும் பருமனைக் கவனித்து ஒல்லியாகவும் அவர் இருக்கின்றார் என்று புரிந்து கொள்கின்றோம்.

இவ்வாறு வித்தியாசப் படுவது ஏன்? பேசப்படும் பொருட்கள் பல இருக்கும் போது அங்கே "உம்மைப் பொருள்' பயன்படுத்தப் பட்டால் பல பொருட்கள் இருப்பதைக் குறிக்க அது உதவும்.

ஒரு பொருளின் பல தன்மைகளைப் பற்றிப் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டால் வேறு வேறு என்று காட்டாது. மாறாக ஒரே பொருளில் அத்தனை தன்மைகளும் உள்ளன என்ற கருத்து வரும். இது தான் எல்லா மொழிகளிலும் உள்ள நிலை.

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றித் தான் கூறப்பட்டுள்ளது. அவர்களிடம் ரசூல் என்ற தன்மையும் நபி என்ற தன்மையும் உள்ளது என்பது தான் இதன் கருத்தாகும். இந்த இரண்டு தன்மைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, பிரிக்க முடியாதவை என்பதற்கு குர்ஆனில் ஏராளமான சான்றுகள் உள்ளன என்பது தனி விஷயம்.

ஆனால் "வேதத்தையும் ஞானத்தையும்' என்று குறிப்பிடும் வசனங்களில் இரண்டு தனித்தனி பொருட்களைப் பற்றி கூறப்படுகின்றன. "சாதிக்கும் ஸாஜிதும் வந்தனர்' என்ற உதாரணத்தைப் போன்று இந்த வசனங்கள் அமைந்துள்ளன. எனவே இரண்டும் வெவ்வேறு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- பி.ஜே

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 9

ஷைத்தானைப் பற்றிய விளக்கங்கள்

ஜின் இனத்தைச் சார்ந்தவன்

ஷைத்தான் ஜின் இனத்தைச் சார்ந்தவனாவான் என்று குர்ஆன் கூறுகிறது.

"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.  அல்குர்ஆன் (18 : 50)

ஷைத்தானின் உருவ அமைப்பு

நரகத்தில் ஸக்கூம் என்ற ஒரு கொடிய மரம் உள்ளது. இதனுடைய கொடூரமான வடிவத்தைப் பற்றி அல்லாஹ் விவரிக்கும் போது அது ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருக்கும் என்று உவமை காட்டுகிறான். இதிலிருந்து ஷைத்தான்களின் வடிவம் அருவருக்கத்தக்க வகையில் கொடூரமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இது சிறந்த தங்குமிடமா? அல்லது ஸக்கூம் மரமா? அதை அநீதி இழைத்தோருக்குச் சோதனையாக நாம் ஆக்கினோம். அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வெளிப்படும் மரம். அதனுடைய பாளை ஷைத்தான்களின் தலைகளைப் போன்றது.  அல்குர்ஆன் (37 : 62.63.64.65)

ஷைத்தானிற்கு கொம்புகள் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.

"இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு சுபிட்சத்தை வழங்குவாயாக!'' என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். மக்கள் (சிலர்), "எங்கள் நஜ்து (இராக்) நாட்டிலும் (சுபிட்சம் ஏற்படப் பிரார்த்தியுங்களேன்!)'' என்று (மூன்று முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்'' என்று கூறினார்கள்.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (1037)

நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள் : மேலும், சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (3273)

தொழுகையைில் ஆமீனை சப்தமாகத்தான் சொல்ல வேண்டுமா?

கேள்வி - தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் ஓதியதற்குப் பிறகு ஆமீன் கூற வேண்டும் என்ற நபிமொழியை போட்டு விட்டு, ஆமீனை மனதுக்குள்ளும் சொல்லாம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் உங்கள் சொந்தக் கூற்றை கூறியுள்ளீர்கள்! விளக்கவும்.

பதில் - இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் எனக் கூறும் போது நீங்கள் ஆமீன்  கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து  விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)  நூல்: புகாரீ 782

இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். எனவே நாம் விரும்பினால் சப்தமிட்டும் ஆமீன் கூறலாம். விரும்பினால் சப்தமிடாமலும் கூறலாம் என்று எழுதியிருந்தோம்.

நபிகளார் அவர்களின் தாய் மொழி அரபியாக இருந்ததால் அவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் அரபி மொழியில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நபிகளார் சொன்ன ஒரு செய்தியை மொழிபெயர்க்கும் போது அந்த மொழியில் அதற்கு என்ன பொருள் கொடுக்க வேண்டுமோ அதே பொருளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் நாம் அவ்வாறு கூறியுள்ளோம். இது எல்லா மொழியில் கடைப்பிடிக்கும் ஒரு முறை தான். தமிழில் உள்ள ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு வாதிடக் கூடாது. அதன் மூலச் சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பதைக் கவனித்து, அந்த மொழியில் அதன் பொருள் என்பதைப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.

- பி.ஜே

இஸ்லாம் ஒற்றுமையை வழியுறுத்துகிறதா?

Tuesday, February 21, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 8

ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு

ஜின்களில் இறைவனை நம்பியோரும் இறைவனை நிராகரிப்பவர்களும் உண்டு. இந்த உலகத்தில் இறைமறுத்தோராக இருந்தோம் என்று கெட்ட ஜின்கள் மறுமை நாளில் தங்களுக்கு எதிராக சாட்சி கூறும்.

ஜின் மற்றும் மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள். அல்குர்ஆன் (6 : 130)

இறைத்தூதர்களுக்கு எதிரிகள்

தீய மனிதர்கள் இறைத்தூதர்களுக்கு துயரங்களையும் துன்பங்களையும் கொடுத்தது போல் கெட்ட ஜின்களும் இறைத்தூதர்களுக்கு இடஞ்சல்களை கொடுத்துள்ளனர்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! அல்குர்ஆன் (6 : 112)

நபி (ஸல்) அவர்களின் தொழுகையை பாழ்படுத்துவதற்காக ஒரு கெட்ட ஜின் ஒன்று முயற்சித்தது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்üவாசலின் தூண்கüல் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, "என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!'' (38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (3423)

ஜின்களுக்கும் விசாரணை உண்டு

உலகத்தில் வாழும் போது ஜின்கள் செய்த குற்றங்களுக்கு மறுமையில் அல்லாஹ் விசாரனை செய்வான்.

ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறை வன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.  அல்குர்ஆன் (37 : 158)
 
அந்நாளில் எந்த மனிதனிடமும், ஜின்னிடமும் அவரது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது.  அல்குர்ஆன் (55 : 39)

Monday, February 20, 2012

தர்ஹா, ஸியாரத் சுன்னத்தா?


இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை

திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டவர்கள். இவர்களது குடும்பத்தினரின் வாழ்வின் பின்னணியில் நாம் பின்பற்றும் முக்கிய கடமைகளும் உள்ளன. ஹஜ் கடமையில் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுதல், குர்பானி கொடுத்தல் போன்ற காரியங்களில், இவர்களது குடும்பம் பின்னணியில் இருப்பதை நாம் மறந்து விட முடியாது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூரும் வண்ணமே இவ்வாறு அல்லாஹ் அமைத்துள்ளான். மேலும் பகுத்தறிவுக் கொள்கையை இவ்வுலகிற்குப் பறை சாற்றியவர்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் தரலாம்.

எந்த விதமான சக்தியும் இல்லாத கல், மண்ணை விட சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எவ்வளவே மேல் என்று அறிவுப்பூர்வமாக விளக்கி, கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுவே என் இறைவன் எனக் கூறினார். அது மறைந்த போது மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன் என்றார். சந்திரன் உதிப்பதை அவர் கண்ட போது இதுவே என் இறைவன் என்றார். அது மறைந்த போது என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன் என்றார். சூரியன் உதிப்பதை அவர் கண்ட போது இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது என்றார். அது மறைந்த போது என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன் எனக் கூறினார். வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்;  (என்றும் கூறினார்).  அல்குர்ஆன் 6:76-79

ஒவ்வொரு வருடமும் குர்பானி கொடுத்து ஹஜ் பெருநாளைக் கொண்டும் முஸ்லிம்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த வழிகாட்டுதலை சிந்தித்துப் பார்த்தால் தர்ஹா வழிபாடுகள் தவிடு பொடியாகிக் காணாமல் போயிருக்கும்.
 
இறந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விட்ட ஒரு மனிதரின் கல்லறையில் சமாதி கட்டி, அவரிடம் கையேந்துவது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காட்டிய பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமானதில்லையா? இறந்த போன அந்த நல்லடியார்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்களா? அல்லது உங்களுக்கு உதவி தான் செய்வார்களா? அல்லது உங்களுக்கு தீங்கு செய்யத் தான் முடியுமா? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கேள்வியைப் பாருங்கள்: நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்கின்றனவா? என்று அவர் கேட்டார். எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம் என்று அவர்கள்  கூறினர்.  அல்குர்ஆன் 26:72, 73


தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் என்றாவது நமது கோரிக்கைகளை செவியுற்றுள்ளார்களா? அல்லது நேரடியாக வந்து ஏதாவது நன்மையைப் புரிந்துள்ளார்களா? அல்லது யாருக்காவது கெடுதியைத் தான் ஏற்படுத்தியுள்ளார்களா? இல்லை. எனவே நிச்சயம் இவர்களுக்கு எந்த சக்தியும் கிடையாது என்பதை உணர வேண்டாமா? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கேள்வியை நினைத்துப் பார்த்தார்களா?

இப்ராஹீம் நபியை உண்மையாக மதிப்பவர்களாக இருந்தால் மூட நம்பிக்கை மற்றும் இணை வைப்புக் கொள்கையை முதலில் கைவிட்டு விட்டு, பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிவொளியை ஏற்றட்டும்.

- தீண்குலப் பெண்மணி

33:72 என்ற வசனத்தின் அமானிதம் என்பதன் விளக்கம் என்ன?

கேள்வி - அல்குர்ஆன் 33:72 வசனத்தில் அமானிதம் என்ற பதத்துக்கு பகுத்தறிவு என்று தமிழகத்து தவ்ஹீது உலமாக்கள் விளக்கமளிக்கின்றார்கள். கண்களுக்குப் புலப்படாத ஒன்றை ஒரு பொருளாகக் கொள்ள முடியாது. மேலும் அமானிதம் என்ற பதம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டிய ஒரு பொருளாகவே கருத வேண்டியுள்ளது. எனவே இந்த அமானிதம் என்பது திருக்குர்ஆனைத் தான் குறிக்கும் என்று எண்ணுகின்றேன். மேலும் அல்குர்ஆன் 59:21 வசனத்தில் இந்தக் குர்ஆனை மலைகள் மீது இறக்கி வைத்திருந்தால் அது பஞ்சு பஞ்சாகப் பறந்திருக்கும் என்று கூறுகின்றான். இந்த இரு வசனங்களையும் இணைத்துப் பார்த்தால் இரண்டுமே அருள்மறைக் குர்ஆனைத் தான் குறிப்பிடுகின்றன என்று ஏன் கூறக்கூடாது?  - ஹெச்.எம். ஹனீபா, இலங்கை

பதில் - வானங்கள், பூமி மற்றும் மலைகளுக்கு அமானிதத்தை நாம் முன் வைத்தோம். அதைச் சுமக்க அஞ்சி அவை மறுத்து விட்டன. மனிதன் அதைச் சுமந்து கொண்டான். அவன் அறியாதவனாகவும், அநீதி இழைப்பவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 33:72)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அமானிதம் என்பது என்ன என்பது குர்ஆனில் ஏனைய இடங்களிலோ அல்லது நபிமொழிகளிலோ சுட்டிக்காட்டப் படவில்லை. எனவே பொதுவாக மனிதர்களுக்கும் ஏனைய அனைத்துப் படைப்பினங்களுக்கும் உள்ள வித்தியாசம் பகுத்தறிவு தான். எனவே இதைத் தான் இந்த வசனம் குறிப்பிடுகின்றது என்று நாம் கூறி வருகின்றோம்.

இதை மறுப்பதற்கு நீங்கள் கூறும் காரணங்கள் 

1. கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை இது குறிப்பிடவில்லை. 

2. அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் பகுத்தறிவு என்று பொருள் கொண்டால் பொருந்தாது என்று கூறுகின்றீர்கள். நீங்கள் குறிப்பிடும் திருக்குர்ஆன் என்ற பொருள் கொண்டாலும் இந்த இரண்டு காரணங்களும் பொருந்தாது என்பதைக் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.

திருக்குர்ஆன் என்பது கண்ணுக்குப் புலப்படும் பொருளாக அருளப்படவில்லை. ஓசை வடிவத்திலானது தான். நம்முடைய வசதிக்காக அதை அச்சிட்டு பொருள் வடிவத்தில் ஆக்கிக் கொண்டோம். திருக்குர்ஆன் வசனங்கள் என்பதும் கண்ணுக்குப் புலப்படாத ஓசை வடிவிலானது தான்.

அமானிதம் என்றால் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறினால் மறுமையில் திருக்குர்ஆனை நாம் திருப்பி ஒப்படைக்கப் போவதில்லை. அதன் போதனைகளின் அடிப்படையில் நடந்தது பற்றித் தான் அல்லாஹ் விசாரிப்பான். அதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றால் அதே விளக்கம் பகுத்தறிவு என்பதற்கும் பொருந்தும்.

இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் இறக்கியிருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் பணிந்து நொறுங்கி விடுவதைக் காண்பீர். மனிதர்கள் சிந்திப்பதற்காக இந்த உதாரணங்களை அவர்களுக்குக் கூறுகிறோம். (அல்குர்ஆன் 59:21)

இந்த வசனத்தையும், மேற்கண்ட வசனத்தையும் இணைத்து அமானிதம் என்பது திருக்குர்ஆன் தான் என்ற முடிவுக்கு வரலாம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இந்த வசனத்தில் நடக்காத ஒன்றை உதாரணமாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். "இறக்கியிருந்தால்'' என்று அல்லாஹ் கூறுவது அவ்வாறு இறக்கவில்லை என்பதையே காட்டுகின்றது.

ஆனால் 33:52 வசனத்தில் அந்த அமானிதத்தை சுமக்குமாறு வானங்கள், பூமி, மலைகள் போன்றவற்றுக்கு நாம் முன் வைத்தோம். ஆனால் அவை மறுத்து விட்டன. மனிதன் சுமந்து கொண்டான் என்று படைப்பின் போது நடந்த நிகழ்வுகளாகக் கூறப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வசனத்தில் "மனிதன் சுமந்து கொண்டான்'' என்பது ஒட்டு மொத்த மனித இனத்தையும் குறிப்பதாகும். ஒருவேளை ஒட்டு மொத்த மனித இனத்திற்கும் வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தாலாவது திருக்குர்ஆனைக் குறிக்கின்றது எனலாம். ஆனால் திருக்குர்ஆன் என்பது நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு மட்டும் உரிய வேதம்! எனவே இந்த வசனத்தில் கூறப்படும் அமானிதம் என்பது திருக்குர்ஆனைக் குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை.

- பி.ஜே

ஸலவாத்தும் அதன் சன்மானங்களும் - எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்க கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர்.

ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாசலை அடைக்கின்றார்கள்.

"கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),  நூல் : புகாரி 3445

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அதுதான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!  (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

துஆ கேட்பதற்கான நேரம் எது?

Sunday, February 19, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 7

சுமைலமான் நபிக்கு வழங்கப்பட்ட  தனிச் சிறப்பு

ஜின்களை மனிதர்களால் வசப்படுத்த முடியாது. இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு  மட்டுமே ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்று திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்களின் போதனையும் கூறுகிறது.

இறைவன் வசப்படுத்திக் கொடுத்த ஒரே காரணத்தால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு நடந்தன. இறைவன் வசப்படுத்தித் தராமல் சுயமாக ஜின்களை வசப்படுத்த முடியுமா என்றால் இது சுலைமான் (அலை) அவர்களாலும் முடியாது.

காற்றை வசப்படுத்துவது எறும்புகளின் பாஷையை அறிவது இதுவெல்லாம் எந்த மனிதனாலும் முடியாத காரியமாகும். ஆனால் இவற்றை இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் வழங்கினான். சுலைமான் நபிக்கு ஜின்கள் கட்டுப்பட்டு நடந்ததும் இந்த அடிப்படையில் தான்.

"என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்'' எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.

ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். "இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!'' (என்று கூறினோம்.)  அல்குர்ஆன் (38 : 35.36.37.38.39)


எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு என்று சுலைமான் (அலை) பிரார்த்தனை செய்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிறகு வேறு யாரருக்கும் ஜின்களை வசப்படுத்தும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்பதை அவர்கள் கேட்ட பிரார்த்தனை ஆணித்தரமாக விவரிக்கிறது.

Saturday, February 18, 2012

நரகத்தில் புகுத்தப்பட்டார்கள் - விளக்கம்

கேள்வி - குர்ஆனில் 71 : 25 வசனத்தில் நூஹ் (அலை) அவர்களின் உபதேசத்தை ஏற்காதவர்கள் மூழ்கடித்து பின்பு நரகத்தில் புகுத்தப்பட்டார்கள் என்று இறைவன் கூறுகின்றான். அப்படியானால் இவர்களுக்கு கப்ர் வேதனை கிடையாதா? கியாமத் நாளின் விசாரணை கிடையாதா? -  எம். திவான் மைதீன், பெரிய குளம்.

பதில் - அந்த வசனத்தில் நரகத்தில் புகுத்தப்பட்டார்கள் என்று கடந்த கால வினையாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால் நூஹ் நபியை எதிர்த்தவர்கள் நரகத்தில் புகுத்தப்பட்டு விட்டதாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நரகத்திற்கு உரியவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதே அதன் பொருள். ஏனெனில் கப்ரு வாழ்க்கை உண்டு, மறுமையில் விசாரணை உண்டு என்பதைப் பல்வேறு குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் கூறுகின்றன.

யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம்.  அல்குர்ஆன் 7:6

இந்த வசனத்தின் படி நூஹ் (அலை) மற்றும் அவர்களுடைய சமுதாயம் உள்ளிட்ட அனைவருமே  விசாரணைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதை அறியலாம்.

மறுமை நாள் ஏற்படும் வரை கப்ரு வாழ்க்கையில் நரகத்தின் தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள். இதைக் கீழ்க்கண்ட வசனம் விளக்குகின்றது.

காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் அவர்கள் காட்டப்படுவார்கள். அந்த நேரம் (மறுமை) ஏற்படும் போது ஃபிர்அவ்னின் ஆட்களைக் கடுமையான வேதனையில் நுழையச் செய்யுங்கள்! (எனக் கூறப்படும்) (அல்குர்ஆன் 40:46)

அழிக்கப்பட்ட சமுதாயங்களில் ஒன்றான ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு நியாயத் தீர்ப்பு நாள் ஏற்பட்டு, நரகத்தில் தண்டனை அளிக்கப்படும் வரை நரக நெருப்பில் அவர்கள் காட்டப் படுவார்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. இது கப்ரில் வழங்கப்படும் தண்டனையாகும். இது ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு மட்டும் உரியது அல்ல! அநியாயம் செய்த அத்தனை பேருக்கும் இதுதான் தண்டனை என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்து அறியலாம்.

(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, "சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்!'' என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம். அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன். ஃபிர்அவ்னின் ஆட்களுக்கும், அவர்களுக்கு முன் சென்றோருக்கும் ஏற்பட்ட கதியைப் போலவே (இவர்களுக்கும் ஏற்படும்). அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை மறுத்தனர். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டித்தான். அல்லாஹ் வலிமை மிக்கவன்; கடுமையாகத் தண்டிப்பவன்.  அல்குர்ஆன் 8:50-52

பாவிகளின் உயிர்களைக் கைப்பற்றிய பின்னர் அளிக்கப்படும் வேதனை ஃபிர் அவ்னுடைய கூட்டத்தினருக்கு அளிக்கப்படும் வேதனை போன்றதாகும் என்று இறைவன் கூறுகின்றான். மறுமைக்கு முன்னர் அதாவது கப்ரு வாழ்க்கையில் வழங்கப்படும் தண்டனை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை இதிலிருந்து அறியலாம்.

இறந்தவர் நல்லவராக இருந்தால் கப்ரு வாழ்க்கையில் உறங்குவார்கள் என்றும் கெட்டவராக இருந்தால் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன.

எனவே யாராக இருந்தாலும் கப்ரு வாழ்க்கை, மறுமையின் விசாரணையைச் சந்தித்தே ஆக வேண்டும்.
- பி.ஜே.

பெற்றோரைப் பேணுவோம் - எம். ஷம்சுல்லுஹா

தாய் படுகொலை, தந்தை ஓட ஓட விரட்டிக் கொலை என்றெல்லாம் செய்தி வெளிவருவது இன்று சர்வ சாதாரணமாக விட்டது. பரபரப்பாக பத்திரிகையில் வெடித்துச் சிதறும் இந்த செய்"தீ'க்களைப் பார்க்கிறோம். கொலையாளி யார் என்று படித்துப் பார்த்தால் பெற்ற மகனே கொலை செய்திருக்கின்றான் என்ற செய்தி நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றது. தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, மாதா பிதா குரு தெய்வம் என்று முதலில் மாதாவையும் கடைசியில் தெய்வத்தையும் தள்ளி பாடம் சொல்லிக் கொடுக்கப் படுகின்ற தமிழகத்தில் தான் இந்தக் கோர நாடகம் பட்டப் பகலில் பலருக்கும் முன்னிலையில் அரங்கேறுகின்றது. இது தாய் தந்தையர் மீது அவர்களது பிள்ளைகள் நடத்துகின்ற உச்சக்கட்ட கோர கொலை வெறித் தாக்குதலாகும்.

இதற்கு அடுத்ததாக இடம் பெறும் கொடுமை அந்தப் பெற்றோர்களை அடிப்பது, அவர்களுக்கு உண்ண உணவு கொடுக்காது, உடுத்த உடை கொடுக்காது துன்புறுத்துவதாகும்.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறும் கொடுமை, அவர்களைத் திட்டித் தீர்ப்பதாகும். அவர்கள் நோய்வாய்ப்பட்டு அல்லலுறும் போது அவர்களை நா கூசாமல், "சனியனே! தொலைந்து போக வேண்டியது தானே! செத்து தொலை!'' என்று அவர்கள் மீது எள்ளும் கொள்ளுமாய் - கொதிக்கும் எண்ணையாய் எரிந்து விழுவது பலருக்கு பழகிப் போன ஒரு பாவமாகி விட்டது.

இது போன்று திட்டுவது மூன்றாவது கட்டக் கொடுமை என்று கொள்ளலாம். இந்த மூன்றாவது கட்டக் கொடுமையில் முஸ்லிம்கள் அதிகமான அளவில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். மீதமுள்ள இரு தீமைகளில் முதலாவது தீமை முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லை. இரண்டாவது மிகக் குறைந்த அளவிலும் மூன்றாவது தீமை மிக அதிக அளவிலும் இடம் பெறுகின்றது. இதற்குக் காரணம் இதை ஒரு பெரும் பாவமாகக் கருவதுவது கிடையாது. அதனால் தான் இந்தத் தீமை சர்வ சாதாரணமாக முஸ்லிம்களிடம் பரவி நிற்கின்றது.

ஆனால் இஸ்லாம் இதை வெறும் பாவமாக அல்ல! பெரும் பாவமாகக் கருதுகின்றது. அதனால் தான் திருக்குர்ஆனில் தாய், தந்தையர்களுக்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய அறக் கடமைகளைப் பற்றி, அருட்பணிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்று கேட்பீராக! (அல்குர்ஆன் 17:23,24)

 

நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா?

கேள்வி - நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா?  - ஹாஜா ஹமீது, நாகை

பதில் -  நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும் கூடாது என்றும் இரண்டு விதமாக ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக இருப்பதால் இரண்டையும்இணைத்தே முடிவுக்கு வரவேண்டும்.

ஒருவர் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் 3771

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்தபோது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபி (ஸல்)அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா,நூல் : புகாரி 5615, 5616

முதலாவது ஹதீஸ் நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதைத் தடை செய்கின்றது. இரண்டாவது ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் அருந்தினார்கள் என்று தெரிவிக்கின்றது.

ஒரு விஷயம் தடை செய்யப்பட்டு அதை நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்று ஹதீஸ்கள் காணப்பட்டால் தடையையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே அந்த அடிப்படையில் நின்று கொண்டு அருந்துவது கூடாது.

எனினும் நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு நீர் அருந்தினார்கள் என்று பல ஹதீஸ்கள் இருப்பதால், தவிர்க்க முடியாத சமயத்தில் நின்று கொண்டு அருந்தினால் தவறில்லை என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில் (5617) இடம் பெற்றுள்ளது. இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.

உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 3775

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. முஸ்லிம் நூலில் மிகப் பெரும் அளவுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே இடம்பெற்றிருந்தாலும் மிகக் குறைந்த அளவு பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றில் இந்த ஹதீசும் ஒன்றாகும்.

- பி.ஜே

கண் திருஷ்டி உண்மையா? இதை நம்பலாமா?

கேள்வி - கண் திருஷ்டி உண்மையா? இதை நம்பலாமா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இருந்தாலும் 9:51 வசனத்துடன் இது மோதுகின்றதே! விளக்கவும். - ஷாஜஹான், தஞ்சை
 
பதில் - "கண் திருஷ்டி என்பது உண்மையே'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மேலும் பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.  அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : புகாரி 5740, 5944

கண் திருஷ்டி உண்மை என்று பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அல்குர்ஆன் 9:51 வசனத்திற்கு முரண்படுவதாகக் கூறி இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நிராகரிக்க முடியாது. இரண்டையும் இணைத்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு பணக்காரர் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து விருந்து வைக்கின்றார். பக்கத்து வீட்டில் ஒருவர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் பட்டினி கிடக்கின்றார் என்றால் இவரது ஏக்கத்தின் காரணமாக இறைவன் அந்தப் பணக்காரருக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றான் என்று இதை எடுத்துக் கொள்ளலாம்.

இது போல் பொறாமை உணர்வோடு சிலர் பார்ப்பது சில பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். (அல்குர்ஆன் 113:5)

பொறாமைப்படும் போது ஏற்படும் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுமாறு இவ்வசனம் கூறுவதிலிருந்து பொறாமையின் மூலமும் தீங்கு ஏற்படும் என்பதை அறிய முடிகின்றது.

"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

எது நடந்தாலும் அது இறைவனின் விதிப்படியே நடக்கிறது என்பது தான் இந்த வசனத்தின் கருத்து! இந்த வசனத்தின் அடிப்படையில் ஒன்று, கண் திருஷ்டியால் நமக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று விளங்கலாம். அல்லது கண் திருஷ்டியால் தீங்கு ஏற்படுமாறு அல்லாஹ் விதித்திருக்கின்றான் என்று விளங்கலாம்.

இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்தை எடுத்துக் கொண்டால் ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களை நிராகரிக்க வேண்டியிருப்பதால் இரண்டாவது கருத்தை எடுத்துக் கொண்டால் எவ்வித முரண்பாடு ஏற்படாது. 


- பி.ஜே

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 6

ஜின்களின் ஆற்றல்


ஜின்கள் மனிதர்களை விட பன்மடங்கு ஆற்றல் உள்ள படைப்பாகும். மனிதனால் செய்ய முடியாத பெரும் பெரும் காரியங்களை ஜின்கள் சர்வசாதாரணமாக செய்து முடிக்கவல்லவை.


கண் மூடி திறப்பதற்குள் நெடு தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று பொருளை எடுத்து வரக்கூடிய ஆற்றல் ஜின்களுக்கு உண்டு. இந்தப் பணியை சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் செய்து கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.


"பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?'' என்று (ஸுலைமான்) கேட்டார்.

"உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்'' என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.

கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் "நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?'' என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன். அல்குர்ஆன் (27 : 38)



பிரம்மாண்டமான கட்டிடங்களையும் சுலைமான் நபிக்குத் தேவையான பொருட்களையும் வியக்கத்க்க விதத்தில் ஜின்கள் செய்துகொடுத்தது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் சிரமமான பணியையும் ஜின்கள் செய்தன.


சுலைமான் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக ஜின்கள் செய்தன. அல்குர்ஆன் (34 : 13)


ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.  அல்குர்ஆன் (21 : 82)


ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். "இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!'' (என்று கூறினோம்.)  அல்குர்ஆன் (38 : 37)

Thursday, February 16, 2012

மறுமையில் கஃபா இடித்து தரைமட்டமாக்கப்படுமா?


கேள்வி : மறுமையின் பத்தாவது அடையாளமாக கஅபா இடித்துத் தரைமட்டமாக்கப்படும் என்பது உண்மையா? இதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் உள்ளதா? ஹஸன் பரீத், திருச்சி 

பதில் : நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீங்கள் என்ன உரையாடிக் கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்கள். இறுதி நாளைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம் என்ற நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதற்கு முன்னால் பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அது ஏற்படாது, 1. புகை, 2. தஜ்ஜால், 3. அதிசய மிருகம் 4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் 5. ஈஸா (அலை) இறங்குதல் 6. யஃஜூஜ் மஃஜூஜ் 7,8,9. கிழக்கு, மேற்கு மற்றும் அரபிய தீபகற்பத்தில் ஏற்படும் மூன்று பூகம்பங்கள் 10. இவற்றில் இறுதியாக யமனிலிருந்து மக்களை அவர்களது மறுமையின் பக்கம் துரத்திச் செல்லும் நெருப்பு ஆகியவை ஆகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் உஸைதுல் கிஃபாரி (ரலி) நூல் : முஸ்லிம் 5162

கியாமத் நாளின் பத்து அடையாளங்களைக் குறிப்பிடும் ஹதீஸ் இது தான். இந்தப் பத்து அடையாளங்களில் கஅபா இடிக்கப்படுவது குறிப்பிடப் படவில்லை. எனினும் கஅபா இடிக்கப்படும் என்று தனியாக ஹதீஸ் உள்ளது. 

"(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கின்றது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 1595

"அபிஸீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்து பாழ்படுத்துவார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1591, 1596

இந்த ஹதீஸ்களில் கியாமத் நாள் வரும் போது கஅபா இடிக்கப்படும் என்று கூறப்படாவிட்டாலும் பின்வரும் ஹதீஸ் அந்த விளக்கத்தைத் தருகின்றது. 

"யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி 1593

கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் ஒன்றான யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் தோன்றிய பிறகு தான் கஅபா இடிப்பு நடைபெறும் என்பதால் இதுவும் கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்று தான் என்பதை அறிய முடிகின்றது. 

- பி.ஜே

இகாமத் சொல்ல மறந்து தொழுதால் தொழுகை கூடுமா?


கேள்வி : கடமையான தொழுகையில் இகாமத் சொல்ல மறந்த நிலையில் தக்பீர் கட்டி, தொழுது விட்டோம். இந்தத் தொழுகை கூடுமா? கூடாதா? ஜாஹிர் ஹுசைன், காஞ்சிபுரம் 


பதில் :  கடமையான தொழுகைக்கு பாங்கு, இகாமத் அவசியம் என்பதை வலியுறுத்தி பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. தனியாகத் தொழுதாலும் பாங்கு, இகாமத் சொல்லியே தொழ வேண்டும். ஆனால் அதே சமயம் அவை தொழுகையின் ஒரு அம்சம் அல்ல! மறந்த நிலையில் இகாமத் சொல்லாமல் தொழுது விட்டால் தொழுகை கூடும். 


"தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது முதல் தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது ஸலாம் கொடுப்பதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அலீ (ரலி),  நூல்கள் : திர்மிதி 3, இப்னுமாஜா 271, அஹ்மத் 957


இந்த ஹதீஸின் அடிப்படையில் தொழுகை என்பது தக்பீர் தஹ்ரிமாவிலிருந்து ஸலாம் கொடுப்பது வரையில் தான் என்பதை அறிய முடிகின்றது. எனவே இகாமத் சொல்லாமல் தொழுது விட்டாலும் தொழுகை நிறைவேறி விடும். இகாமத் சொல்லாவிட்டால் கடமையான தொழுகைக்கு முன்னர் நிறைவேற்ற வேண்டிய ஒரு சுன்னத்தின் நன்மையை இழந்து விடுகின்றோம் என்பது தானே தவிர தொழுகை கூடாது என்று கூற முடியாது. 


- பி.ஜே

மனிதரில் சிறந்தவர் மனைவியிடம் சிறந்தவரே! - எம். ஷம்சுல்லுஹா

"இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082

ஒருவர் ஊருக்கு நல்லவராகி விடலாம். ஆனால் வீட்டுக்கு நல்லவரானால் தான் அவர் அல்லாஹ்விடம் நல்லவராவார் என்ற உயரிய பண்பை நபி (ஸல்) அவர்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்கள்.

இன்று நாம் தொழுகை, நோன்பு, ஹஜ், ஜகாத் போன்றவற்றைச் செய்து முழுமையான முஃமின்களாக ஆகி விடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இந்த வணக்கங்களில் நாம் சரியாக இருந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் அக்னிப் பிழம்பாக ஆதிக்க எஜமானாக வாழ்ந்து கொண்டிருந்தால் நாம் முழுமையான முஃமினாக ஆகி விட முடியாது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

இன்று நம்மிடம் இது போன்ற வாழ்க்கை இன்னும் மலரவில்லை. நாம் இந்த நாட்டில் வாழும் பிற மத சமுதாய கலாச்சாரப் பிடியிலிருந்து விடுபடவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு தான் மனைவி சாப்பிட வேண்டும்! கணவன் உறங்கும் போது மனைவி எழுப்பக் கூடாது! ஆனால் மனைவியைக் கணவன் எப்போது வேண்டுமானாலும் எழுப்பி வேலை வாங்கிக் கொள்ளலாம் என்ற மாற்று மதக் கலாச்சாரம் நம்மிடம் வேரூன்றிக் கிடக்கின்றது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தக் கலாச்சாரத்தை உடைத்தெறிகின்றார்கள்.

Wednesday, February 15, 2012

நிச்சயிக்கப்படும் திருமணங்கள் – இஸ்லாமியத் தீர்வு என்ன? - ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி

இஸ்லாமிய மார்க்கம் என்பது இவ்வுலக மக்களுக்குறிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டமாகும். மனிதனின் அனைத்து செயல்பாடுகளிலும் நுழைந்து தெளிவான தீர்வை சொல்லும் மிகச் சிறப்பான வழிகாட்டியாகும். இம்மார்க்கத்தில் எந்தவொரு செயல்பாட்டுக்கும் வழிகாட்டுதல் இல்லாமல் இல்லை.

இப்படியிருக்கையில் நமது சமுதாயத்தினர் மத்தியில் திருமணம் பற்றிய சரியான விழிப்புனர்வோ, இஸ்லாத்தின் உண்மையான சட்ட திட்டங்களோ முறையாக சொல்லிக் கொடுக்கப்படாததினால் அல்லது அவர்கள் முறையாக கற்றுக் கொள்ளாததினால் வாழ்கைத் தேர்வு முறையில் பல தவறுகளை செய்கிறார்கள்.

நமது காலத்தில் பெரும்பாலும் எல்லா இடத்திலும் திருமணங்கள் பல நிச்சயிக்கப்பட்டு வருடக் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. ஆனால் இது பற்றிய இஸ்லாமிய நிலைபாடு மிகத் தெளிவானதாகும். அதைப் பற்றியே கட்டுரை ஆராய்கிறது.

திருமணம் - தவிர்க்கக் கூடாத நடை முறை.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் (24 : 32))

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள். (நூல் புகாரி (5066))

மேலும் திருணம் செய்துகொள்வது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும். தனக்கு திருமணம் செய்துகொள்ள சக்தியிருந்தும் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் அவர் தன்னைச் சார்ந்தவர் இல்லை என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

முடிச்சுகளில் ஊதும் பெண்கள் - சூரத்துல் ஃபலக் - விளக்கம்

ஆன்லைன் பி.ஜே

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்


ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல்இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)

ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.

நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா

கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன் முதல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.

Monday, February 13, 2012

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 5


ஜின்களின் உணவு

மனிதர்கள் உண்டுவிட்டு எரியும் எலும்புகளும் கால்நடைகளின் சாணங்களும் கரிக்கட்டைகளும் ஜின்களின் உணவாகும். சாப்பிடுவதற்கு இவற்றில் ஒன்றுமில்லையே என்று நமக்குத் தோன்றினாலும் ஜின்களுக்கு அதில் அல்லாஹ் நிறைவான உணவை வைத்துள்ளான். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னிடம் "நஸீபீன்' என்னுமிடத்தைச் சேர்ந்த ஜின்களின் குழு ஒன்று வந்தது. அவை நல்ல ஜின்களாயிருந்தன. அவை என்னிடம் உணவு தரும்படி கேட்டன. நான், "அவை எந்த எலும்பையும் எந்த கெட்டிச் சாணத்தையும் கடந்து சென்றாலும் அதில் உணவைப் பெற்றுக் கொள்ள வேண்டும்'' என்று அல்லாஹ்விடம் அவற்றுக்காகப் பிரார்த்தித்தேன்.''என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (3860)

ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் பெயர் சொல்லிலி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும்'' என்று கூறினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா)  செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : முஸ்லிம் (767)

ஜின்கள் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே எழும்பு கெட்டிச் சாணம் கறிக்கட்டை ஆகியவற்றால் துப்புரவு செய்வதை விட்டும் உங்கள் சமுதாயத்தினரை தடுங்கள். ஏனென்றால் இவற்றில் தான் அல்லாஹ் எங்களுக்கு உணவை ஏற்படுத்தியிருக்கிறான் என்று கூறின. ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதனை தடுத்தார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அபூதாவுத் (35)

ஜின்களின் இருப்பிடம்

மனிதர்களைப் போலவே ஜின்களும் பூமியில் ஆங்காங்கே வசிக்கின்றன. குறிப்பாக ஓடைகள் மற்றும் மலைக்கணவாய்களில் தங்கி இருக்கின்றன. 

தொழுகையில் அல்ஹம்து சூராவுடன் துணை சூரா ஓத வேண்டுமா?


கேள்வி : சப்தமில்லாமல் ஓதித் தொழும் லுஹர் அஸர் ஆகிய தொழுகைகளில் முதல் இரண்டு ரக் அத்களில் அல்ஹம்து சூராவுடன் துணை சூராவும் ஓத வேண்டுமா?

பதில் : இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் மட்டும் அவருக்குப் பின்னால் தொழுபவர்கள் எதையும் ஓதக்கூடாது. மாறாக மௌனமாக இருந்து அவர் ஓதுவதை செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். 

லுஹர் அஸர் போன்ற தொழுகைகளில் இமாம் சப்தமிட்டு ஓத மாட்டார். இப்போது இமாமுக்குப் பின்னால் தொழுபவர்கள் கண்டிப்பாக சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். ஏனென்றால் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

Saturday, February 11, 2012

ஆடை அணிவதன் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதில் இஸ்லாம் சில ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.

1. மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்

"எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்''  என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்'' என்று விடையளித்தார்கள். "ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல்: திர்மிதி 2693, 3718

2. ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  நூல்: திர்மிதி 2717, அபூதாவூத் 3502

3. வலது புறமாக ஆரம்பம் செய்ய வேண்டும்
 
நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.  நூல்: திர்மிதி 1688


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.  நூல்: அபூதாவூத் 3612
 
4. பெருமைக்காக ஆடையை தரையில் படுமாறு நடக்கக் கூடாது


நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகில் புகுவார்.  நூல்: புகாரி 5787

அபூதர் (ரலி) கூறியதாவது: "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை கணுக் கால்களுக்குக் கீழ் இறக்கிக் கட்டியவர், செய்த உபகாரத்தைச் சொல்லி காட்டுபவர், பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்''  என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.  நூல்: முஸ்லிம் 171

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் இழுத்துக் கொண்டே நடந்த போது அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்.  நூல்: புகாரி 3485

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 4

உருமாற்றம் செய்யப்பட்ட ஜின்கள்

சில ஜின்கள் பாம்புகளாக உருமாற்றம் செய்யப்பட்டன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்ரவேலர்களில் (சிலர்) பன்றிகளாகவும் குரங்குகளாகவும் உருமாற்றம் செய்யப்பட்டதைப் போல் (சில) ஜின்கள் பாம்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : அஹ்மத் (3085) தப்பரானீ (4364)

உருமாற்றப்பட்ட உயிரினங்களுக்கு சந்ததிகளை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இந்த வகை உயிரினங்களுக்கு வழிதோன்றல்கள் இல்லாததால் அவை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் அழிந்து போயிருக்கும். எனவே தற்காலத்தில் பாம்பு வடிவில் உருமாற்றப்பட்ட ஜின்கள் இருப்பதற்கு சாத்தியமில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  நூல் : முஸ்லிம் (5176)

பாம்புகளை கொல்ல வேண்டும்

பாம்புகள் மனித உயிரை பறிக்கின்ற விஷப்பிராணி என்பதால் அவற்றை கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே பாம்புகளைக் கண்டால் கொல்லாமல் விட்டுவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, "பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட ("துத் துஃப்யத்தைன்' என்னும்) பாம்பையும் குட்டையான- அல்லது- சிதைந்த வால் கொண்ட ("அப்தர்' எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்'' என்று  சொல்ல நான் கேட்டேன்.  அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : புகாரி (3297)
 
நாங்கள் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, "வல் முர்சலாத்தி'' (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம்  புதிதாகச் செவியேற்றுக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ü வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்!'' என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம்.

அது (தனது புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று சொன்னார்கள்.  அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (4934)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்!  அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை! அவை பாம்பு காகம், பருந்து, எலிலி, வெறிநாய் ஆகியனவாகும்.  அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  நூல் : நஸயீ (2780)

Friday, February 10, 2012

முரண்பாடுகள் தோன்றியது எப்படி? - எம்.ஐ சுலைமான்

1400 ஆண்டுகளுக்கு முன் இறுதித் தூதராக இவ்வுலகத்திற்கு வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய அரபுலகத்தில் இருந்த அறியாமை இருளை நீக்கி, இஸ்லாம் என்ற ஒளியை ஏற்றி வைத்தார்கள்.

இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும் தனது வழிமுறையின் அடிப்படையிலும் மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சட்டங்களின் அடிப்படைகளையும் விளக்கிச் சென்றார்கள்.

அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் இலட்சக்கணக்கான தொண்டர்களை, தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள்.  அந்த அன்புத் தோழர்களின் அறப் பணியால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பரவி உள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே முறையில் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுவதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு பல புதிய பெயர்களில் செயல்படுகின்றனர்.

இவ்வாறு பல பிரிவாகி ஒவ்வொரு பிரிவினரும் புதிய புதிய வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்களா? அறவே இல்லையே! அப்படியானால் முஸ்லிம்களில் ஏராளமான பிரிவுகள் வந்ததன் காரணம் என்ன?

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

Thursday, February 9, 2012

இறைவனுக்கு இணை வைத்ததினால், இறுதித் தூதரின் பெற்றோருக்கும் நரகமே! - ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி

இந்த உலக மக்கள் நேர்வழி பெற்று மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கச் சோலையில் சுதந்திரமாக சுற்றித் திரிய வேண்டும் என்பதற்காக இறைவனால் இந்த உலகுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்த நபியின் பெற்றோர்களின் மறுமை நிலை என்ன என்பதைப் பற்றி நாம் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

ஏன் என்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த நபியவர்கள் முதன்மையாக இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக லா இலாக இல்லல்லா முஹம்மதுன் ரசூலுல்லாஹ் – அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபியவர்கள் இறைவனின் தூதராவார் என்ற கோட்பாட்டைத்தான் முன்வைத்தார்கள்.

இந்தக் கொள்கையில் யார் உடன் படுகிறார்களோ அவா்கள் முஸ்லீம்கள் என்றும் யார் இதற்கு மாறு செய்கிறார்களோ அவா்கள் காபிர்கள் – மறுத்தவர்கள் என்றும் அறியப்படுகிறார்கள்.

இந்த வகையில் நபியின் காலத்திற்கு அதாவது நபியவர்கள் தங்களை இறைவனின் தூதர் என்று பிரச்சாரம் செய்வதற்கு முன்பாகவே நபியுடைய தாயும் தந்தையும் மரணித்துவிட்டார்கள். இந்த இருவரினுடையவும் மறுமை நிலை என்ன  என்பதைப் பற்றி ஆய்வதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.

நபியைப் பிள்ளையாய்ப் பெறுவதே சுவர்க்கம் செல்லப் போதுமானதா?

ஒருவர் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றால் இஸ்லாம் காட்டிய அடிப்படையில் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல், அவனுடைய தூதரை ஏற்றுக் கொண்டு அவா் காட்டிய வழிப்பிரகாரம் வாழ வேண்டும் இதற்கு மாற்றமாக வாழ்ந்தால் அவா் நரகத்திற்குறியவராக ஆகிவிடுவார்.

மஹர் (மணக்கொடை) - திருக்குர்ஆன் வசனங்களுடன் விளக்கம்

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்! (அல்குர்ஆன் 4:4)

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்ட, கணவனில்லாத பெண்களை மணந்து கொள்வதற்கு உங்களில் (பொருள்) வசதி இல்லாதவர் நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!) உங்கள் நம்பிக்கையை அல்லாஹ் நன்கறிபவன். நீங்களும், அவர்களும் ஒன்றுக்குள் ஒன்றாக இருப்பவர்களே. அவர்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதியுடன் மணந்து கொள்ளுங்கள்! கள்ளக் கணவர்களை ஏற்படுத்தாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்பொழுக்கமுடையோராகவும் உள்ள அடிமைப் பெண்களுக்கு மணக் கொடைகளை108 நியாயமான முறையில் அவர்களிடம் வழங்கி விடுங்கள்! அவர்கள் மணமுடிக்கப்பட்ட பின் வெட்கக் கேடானதைச் செய்தால் கணவனில்லாத பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனையில் பாதி அவர்களுக்கு உண்டு. இது உங்களில் விபச்சாரத்தை அஞ்சுவோருக்குரியது! நீங்கள் பொறுமையை மேற்கொள்வது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 4:24, 25)

ஏகத்துவம் ஓர் வரலாற்றுப் பார்வை - ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி

உலக வரலாற்றில் தோன்றிய மதங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரு காலத்தோடு முடிந்து போய் அந்தக் கொள்கைகள் இருந்த இடமே இல்லாமல் போன வரலாறுகள் நிறையவே உண்டு. அந்தக் கொள்கைகளின் நம்பகமின்னையே இதற்கான பிரதான காரணமாகும்.

ஆனால் இஸ்லாம் இந்த உலகில் என்று தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு தோழ்வியும் இன்றி வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு அனைவரும் அறிந்ததே!

இஸ்லாம் இப்பயெல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதற்கான காரணம் வரலாறு நெடிகிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

நபிமார்களின் இறையச்சம், நேர்மை, நம்பகத்தன்மை, வார்த்தைத் தூய்மை இவைகளே இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்றும் நிலைப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.

அதிலும் இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் கொள்கை மற்ற அனைத்து மதங்களும், சித்தாங்களும் கொள்கைகளும் சொல்லும் அடிப்படைத் தத்துவத்துடன் நேர் மாறாக மோதும் கொள்கையாக இருக்கிறது.

அதுதான் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவரையும் வணங்கக் கூடாது என்பதும் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்பதுமாகும்.

ஏகத்துவத்தை தனது உயிர் மூச்சாகக் கொண்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்காக இறுதியாக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, February 8, 2012

அன்னை ஆயிஷா (ரலி) மீது பரப்பப்பட்ட அவதூறு சம்பவம் (முழுமையான ஹதீஸ்)

ஆயிஷா (ரலி) கூறுகின்றார்கள்,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடயே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள்.  அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.

இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது.  எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.  நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கை கடனை நிறைவேற்று வதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது.

ஆகவே நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன். அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப் படுத்தி விட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர்.

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 3

ஜின்களும் பேய்களும் ஒன்றா?

பேய்களுக்கும் கெட்ட ஆவிகளுக்கும் ஜின்கள் என்று சொல்லப்படுவதாக சிலர் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். இக்கருத்து இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் இறந்து போனவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று பேய்நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை குர்ஆனும் ஹதீஸ்களும் பொய்யென நிராகரிக்கிறது.

இறந்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவரின் உயிர் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறது. அவனது கடுமையான பிடியிலிருந்து ஆவிகள் தப்பித்து வரவே முடியாது என்று திருக்குர்ஆன் கூறும் போது ஆவிகள் பூமியில் சுற்றித்திரிகிறது என நம்புவது குர்ஆனிற்கு எதிரானதும் மூடநம்பிக்கையுமாகும். எனவே பேய்கள் இருப்பதாக நம்பக்கூடாது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  அல்குர்ஆன் (39 : 42)

பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.

பேய்கள் என்று எதுவும் பூமியில் இல்லை. பேய் நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதாகும். ஆனால் ஜின்களை நம்புவது பேய்களை நம்புவது போன்றதல்ல.

ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.

பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூறமாட்டார்.

Tuesday, February 7, 2012

பாமரர்களால் குர்ஆனை விளங்க முடியுமா?

கேள்வி : சாதாரணமானவர்களால் குர்ஆன், ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழி பெயர்ப்புகளைத் தானே நம்ப வேண்டியுள்ளது?  - S.M.செய்யிது அஹ்மது அலி B.Aதூத்துக்குடி.

பதில் : மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர்எடுத்து வைக்கும் ஆதாரமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். குர்ஆன், ஹதீஸையே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுக்குக் கூட மயக்கத்தை ஏற்படுத்தும் பொய்யான வாதமாகும் இது.

குர்ஆனும்,ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மை தான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத் தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மை தான்.

இந்தக் காரணங்களுக்காகத் தான் மத்ஹபுகள் அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் மொழியில் தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தமது தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே! அவர்கள் எழுதிய, அல்லது எழுதியதாகச் சொல்லப்படும் நூல்கள் யாவுமே அரபி மொழியில் அமைந்தவையே.

இதே வாதத்தின் அடிப்படையில் இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது என்பதனாலும், அந்த இமாம்களும் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும்,  அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும்.

ஜின்களும்,ஷைத்தான்களும் - சகோ. அப்பாஸ் அலி - தொடர் 2

ஜின் என்ற வார்ததையின் பொருள்

அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும்.

மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை நம் கண்களால் காண முடியும். ஆனால் ஜின்களை மனிதக் கண்களால் காண முடியாது. மாறாக ஜின்களால் மனிதர்களை காணமுடியும்.

ஜன்ன என்ற வினைச் சொல்லிலிருந்து ஜின் என்ற வார்த்தை பிரிந்து வந்துள்ளது. மறைத்தல் மறைதல் என்பது இதன் நேரடிப் பொருளாகும். திருமறைக் குர்ஆனில் ஜன்ன என்ற வார்த்தை மூடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இதுவே என் இறைவன்'' எனக் கூறினார். அது மறைந்த போது "மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன்'' என்றார்.  அல்குர்ஆன் (6 : 76)

எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தன்னை மறைத்துக் கொள்வதற்கு கேடயம் உதவுவதால் கேடயத்திற்கு ஜுன்னத் என்று சொல்லப்படுகிறது. தாயின் வயிற்றில் உள்ளக் குழந்தை மறைவாக இருப்பதால் அதற்கு ஜனீன் என்று கூறப்படுகிறது.

பாம்புகள் மனிதக் கண்களை விட்டு விரைவில் மறைந்துவிடுவதால் பாம்புகளுக்கு ஜான் என்று கூறப்படுகிறது. ஜின்கள் மனிதக்கண்களுக்கு புலப்படாமல் மறைந்து இருப்பதால் இதற்கு ஜின் என்று கூறப்படுகிறது.  நூல் : லிஸானுல் அரப் பாகம் : 13 பக்கம் : 92
 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner