கேள்வி - இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்ய திருக்குர்ஆன் தடை செய்கிறது. தற்போது தர்ஹா வழிபாடுகளில் ஈடுபடும் பெண்களை திருமணம் செய்யக் கூடாதா?
பதில் - இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தடை சிலை வணக்க வழிபாடுகளைச் செய்யும் நபர்களை மட்டும் குறிக்காது. முஸ்லிம்கள் என்று பெயரளவில் தங்களைக் கூறிக் கொண்டு அன்றைய காலத்தில் இணை வைப்பாளர்கள் செய்த காரியத்தை அப்படியே செய்யும் இன்றைய கால முஸ்லிம்களையும் குறிக்கவே செய்யும்.
தடை ஆட்களை வைத்து கூறப்பட்டதல்ல! அவர்களின் செயல்களை வைத்துத் தான் சொல்லப்பட்டுள்ளது. எனவே இணை வைக்கும் செயல் யாரிடம் இருந்தாலும் இந்தத் தடை அவர்களுக்கும் பொருந்தவே செய்யும்.
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி (5090)
இந்த நபிமொழியின் அடிப்படையில், திருமணம் செய்பவர்கள் முதன் முதலில் மார்க்கம் உள்ள பெண்ணாகத் தேர்வு செய்யவேண்டும். மார்க்கத்தில் முதலிடம் ஓரிறைக் கொள்கையாகும். அந்த ஓரிறைக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் இணை வைப்புக் கொள்கையில் ஒரு பெண் இருந்தாலோ அல்லது ஆண் இருந்தாலோ அவர்களை ஒரு போதும் மணமகளாக அல்லது மணமகனாகத் தேர்வு செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியும் விளக்குகிறது.

- பி.ஜே.
0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...