கறுப்பு நிறமும், தரித்திரமும்
முஸ்லிம்களில் சிலர் கறுப்பு நிறத்தை தரித்திரம் என்று நம்புகின்றனர். கறுப்பு
நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீங்குகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர். இந்த நம்பிக்கை சரியானதா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்காவில் பிரவேசித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2638
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புத் தலைப்பாகை அணிந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நூல்: முஸ்லிம் 2639
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொடி கறுப்பு நிறமாக இருந்தது. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ 1604
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்பு மேலாடை அணிந்து மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) நூல்: நஸயீ 1490
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருப்புப் போர்வை அணிந்திருந்தார்கள். ஹஸன், ஹுசைன், ஃபாத்திமா ஆகியோரை அதற்குள்ளே சேர்த்துக் கொண்டார்கள். நூல்: முஸ்லிம் 4450
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கறுப்பு மேலாடை ஒன்றைத் தயார் செய்து கொடுத்தேன். அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். வியர்வை ஏற்பட்டதும் கம்பளி வாடையை உணர்ந்ததால் அதைக் கழற்றி விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 3552
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கறுப்புப் போர்வை, கறுப்புக் கம்பளி அணிந்ததாக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.
கறுப்பு நிறப் பொருட்கள் தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பது மூடநம்பிக்கை என்று இதிலிருந்து உணரலாம். காவி நிற ஆடையைத் தவிர மற்ற எல்லா நிறங்களும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

0 comments:
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...