Sunday, January 4, 2015

வேற்றுக்கிரக வாசிகள்(?)

வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? அப்படி வாழ்ந்தால் அவற்றின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? அவைகளும் மனிதர்களைப் போன்றனவா? அல்லது வித்தியாச குணங்கள் கொண்டவையா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் ஒவ்வொருவருடைய மனதிலும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்க்குத்தான் யார் இருக்கிறார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். 

முதலில் வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பாக சொல்லப் படும் கதைகள் என்ன? கற்பனைகள் என்ன?விஞ்ஞானத் தகவல்கள் என்ன? என்பவற்றைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொண்டால் இதன் உண்மை நிலையை புரிந்து கொள்வது மிக எழிதானதாகி விடும். 

வேற்றுக்கிரக வாசிகள் தொடர்பான கதைகள். 


இது தொடர்பாக நிறையக் கதைகள் இருந்தாலும் மக்கள் பெறுமளவுக்கு நம்பக் கூடிய  கிட்டத்தட்ட 5அல்லது 6 கதைகள் உள்ளன.

அதில் முதலாவது: 1254ம் ஆண்டு இங்கிலாந்தின் எல்பன்ஸ் தேவாலயத்திற்கு மேலால் புதுமையான பறக்கும் பொருள் ஒன்று காணப்பட்டதாகவும், அது வேற்றுக்கிரக வாசிகள் வருகை தரக்கூடிய பறக்கும் தட்டாக இருக்கலாம் எனவும் நம்பப் படுகிறது. 

அதே போல் 1741ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதிக்கு மேலாக வட்ட வடிவத்தை விட சற்று சரிவான மர்மப் பொருள் ஒன்று பறந்து வின்னில் மறைந்ததாக போசெப் பிரபு என்பவர் கூறியிருந்தார்.

அதுபோன்றே மின்குமிழ் வடிவத்தில் பறக்கும் பொருள் ஒன்று சுவிற்ச்சர்லாந்திற்கு மேலால் பறந்ததாக 1762ம் ஆண்டு கூறப்பட்டது.

பிரான்சின் எம்பிரம் பகுதிக்கு மேலாக வட்ட வடிவில் பறக்கும் தட்டுக்கள் பல பறந்ததாக 1820ம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. 

1947ம் ஆண்டு பறக்கும் தட்டொன்ரைப் பார்த்ததாக விமான ஓட்டி ஒருவர் கூறிய தகவலும் இருக்கிறது. தாம் பறக்கும் தட்டுக்களால் கடத்திச் செல்லப் பட்டதாக 1971ம் ஆண்டு இரண்டு அமெரிக்கர்கள் கூறியிருந்தனர்.

அதில் இருந்த உயிரினங்கள் அதிக உயரமும், மெல்லிய உடம்பையும் கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இவ்வாரான ஏராலமான கதைகள் காணப்படுகின்றன.எல்லாம் கதைகள்தானே தவிர நிஜங்கள் அல்ல. 

மில்லியன் கணக்கில் பறக்கும் தட்டுக்கள்(?) 


கடந்த 40 வருட காலப் பகுதிpக்குள் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வேற்றுக் கிரகங்களில் இருந்து வருவதாக நம்பப் படும் மர்மப் பொருட்களை, பறக்கும் தட்டுக்களை தாம் கண்டதாக கூறியுள்ளனர்.1974ம் ஆண்டு அமெரிக்காவில் இது தொடர்பாக கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப் பட்டது.

அதில் அநேகர் இத்தகைய மர்மப் பொருட்களை கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. (இதுவும் இதுவரைக்கும் நிரூபிக்கப் படவில்லை) 

1952ம் ஆண்டில் மாத்திரம் இவ்வாரான 1500 பறக்கும் தட்டுக்கள் வரை தெரிந்ததாக உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டன.

அநேகமானோர் பறக்கும் தட்டுக்களாகக் கருதியவை வித்தியாசமான உரு அமைப்பை உடைய விமானங்கள், முகிற்கூட்டங்கள், நட்சத்திரங்கள், செய்மதிகள் ஆகியவை தாம் என்று பின்பு புலனாகியது. 

அதே போன்றுதான் 1964ம் ஆண்டு சுவீடனுக்கு மேலாக பறக்கும் தட்டுக்களை அவதானித்ததாக கிட்டத்தட்ட 1000க்கும் மேற்ப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அத்தனை பேரும் அதை ஒரு ராக்கட் வடிவத்திற்குத்தான் ஒப்புக் காட்டினார்கள். இதுவும் இது வரைக்கும் உண்மையென்று யாராலும் நிரூபிக்கப் படவில்லை. 

அது போன்றே ஈஸ்டர் தினத்தின் முக்கியத்துவம் மிக்க மோய் உருவச்சிலை வேற்றுக்கிரக வாசிகளின் உதவியுடனேயே நிர்மானிக்கப் பட்டதாக சிலர் நம்புகின்றனர். ஆனாலும் இவைகள் பொய்யான தகவல்கள் என விஞ்ஞானிகள் உருதியாக கூறிவிட்டனர்.

- நன்றி ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி (www.rasminmisc.com)

0 comments:

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக தங்களது கருத்துக்களை பதியுங்கள்...

 
x

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

Enter your email address:

Delivered by FeedBurner